|
பாடல் எண் :2054 | தன்னிற் றன்னை யறியுந் தலைமகன் தன்னிற் றன்னை யறியில் தலைப்படும் தன்னிற் றன்னை யறிவில னாயிடில் தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே. |
| 29 | பொ-ரை: தன்னில் தன்னை அறியும் தலைமகனாகிய இறைவன் தன்னில் ஒருவன் தன்னையறிந்தால் தலைப்படுவான்.தன்னில் தன்னை அறியும் அறிவிலாகில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரிய இயல்பினன் ஆவன். கு-ரை: தன்னில்தன்னை - தன்னுடைய உடலில் இறைவனை அறியில் - அறிவார்களேயானானல் தலைப்படும் - அவரவர் உள்ளத்தில் இடம்பெறுவான். அறிவிலனாய்விடில் - அங்ஙனம் ஒருவன் அறியா தொழிவானேயானால் தன்னில் தன்னையும் சார்தற் கரியன் - நம்மிடமுள்ள பெருமானை அடைதற்கு அரியவனாவான். |
|