|
பாடல் எண் :2060 | கூறே றும்உமை பாகமோர் பாலராய் ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர் பாறே றுந்தலை யேந்திப் பலவி(ல்)லம் ஏறே றுமெந்தை யைக்கண்டனெுள்ளமே. |
| 5 | பொ-ரை: கூறாகப் பொருந்தி உடையொரு பாகராகிக், கங்கை ஏறிய சடைமேற் பிறை சூடியவராய் , பருந்துகள் ஏறிப்பறக்கும் வெண்டலை ஏந்திப் பல இல்லங்கள் தோறும் இடபம் ஏறிவரும் எந்தையை என் உள்ளம் கண்டு கொண்டது. கு-ரை: கூறுஏறும் - உடம்பில் ஒரு பாதியில் பொருந்தும் பாற ஏறும் தலையேந்தி - இடுகாட்டுள் பொருந்திய மண்டையோட்டை ஏந்தி ஏறுஏறும் - இடபத்தில் ஏறும். |
|