|
பாடல் எண் :2061 | முன்னெஞ் சம்மின்றி மூர்க்கராய்ச் சாகின்றார் தந்நெஞ் சந்தமக் குத்தாமி லாதவர் வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லீரே என்னெஞ் சிலீச னைக்கண்டதெ னுள்ளமே. |
| 6 | பொ-ரை: தம் நெஞ்சம் தமக்குத்தாம் இல்லத சிலர் முன்னுதற்குரிய நெஞ்சம் இல்லாமல் மூர்க்கராய் வாழ்ந்து சாகின்றார், வன்மையுடைய நெஞ்சத்தை நீங்க வல்லமை உடையவர்களே என் நெஞ்சில் ஈசனை என்னுள்ளம் கண்டுகொண்டது. கு-ரை: முன் - நினைக்கும் நெஞ்சமின்றி - மனத்தின கண் இரக்கமின்றி மூர்க்கராய் - கொடியவராய் சாகின்றார் - இறந்து படுகின்றார்கள். தன்நெஞ்சம் தமக்குத்தாம் இலாதவர் - தன்நெஞ்சினாலாகும் நன்மைகளைத் தாமே தேடிக்கொள்ளாதவர். வன்னெஞ்சம் - கொடியமனம். நீங்குதல் வல்லீரே - நீக்கிக் கொள்ளதலில் வல்லவர்களே. |
|