பாடல் எண் :2067
கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கு மீச னெனாதவர்க் கில்லையே.

2
பொ-ரை:கங்கை நீராடிலும், காவிரியில் நீராடிலும், மணமும் குளிர்ச்சியும் உடைய குமரித்துறையில் நீராடிலும்,பெருகி ஓலிக்கின்ற கடல் நீர்த்துறைதோறும் நீராடிலும் என்ன பயன்? எங்கும் இறைவன் என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லை.
கு-ரை: கொங்கு - மணம் நிறைந்த. ஓங்கு என்பதன் குறுக்கல் ஓங்கு. மா - பொரிய. ஓதநீர் - அலைநீர்.
ஈசன் ஓருவன் இருக்கின்றான் அவனருள்பெற இத்தீர்த்தமாடுகின்றோம் என்று எண்ணாதவர்க்கு அத்தீர்த்தமாடுவதால் விளையும் பயன் இல்லை.