|
பாடல் எண் :2071 | கான நாடு கலந்து திரியிலென் ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென் ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென் ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே. |
| 6 | பொ-ரை: காட்டுப பகுதிகளிற் கலந்து திரிந்தாலும், இழிவின்றிப் பெருந்தவம் செய்தாலும், ஊன் உண்ணுதலையொழிந்து வானத்தை நோக்கினாலும் என்ன பயன்? ஞானமயமாகியன்றி மற்றவர்க்கு இவற்றால் நற்பயன் இல்லை. கு-ரை: கானநாடு - காடும் நாடும். கலந்து மாறுமாறுக் கூடி. திரியிலென் - ஷேத்திராடனம் புரிவதால் என்ன பயன் விளையும். ஈனம் - குற்றம். இரும் - பெரிய. ஊனை உண்டல் ஓழிந்து - ஊனுண்டலை விடுத்து. வான் நோக்கிலென் - மேலுலக ஆராய்ச்சியில் ஈடுபட்டால் என்ன பயன்? ஞானன் - ஞானவடிவினன். |
|