|
பாடல் எண் :2083 | அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில் அருக்க னாவா னரனுரு வல்லனோ இருக்கு நான்மறை யீசனை யேதொழும் கருத்தி னைநினை யார்கன் மனவரே. |
| 8 | பொ-ரை: அந்தியில் சூரியன் பாதங்களை வணங்குவர்; சூரியனாவான் சிவபெருமானின் உருவம் அல்லனோ? இருக்கு முதலிய நான்கு வேதங்கள் இறைவனையே தொழும் கருத்தினைக் கல்மனம் படைத்தவர்களாய்ச் சிலர் நினைக்கமாட்டார்கள். 1நரிவிருத்தம் என்பது நரியினது வரலாறு எனப் பொருள் படும். காட்டில் வேடனொருவன் யானையைக் கொல்ல ஓர் அம்பை எய்து மற்றோர் அம்பை வில்லில் பூட்டி வைத்துக் கொண்டிருந்தான். அவ்வேளையில் பாம்பு ஒன்று அவனைக் கடித்தது. தன்னைக் கடித்த பாம்பை வாளால் வெட்டிக்கொன்று தானும் மூர்ச்சித்து விழுந்து இறந்தான். ஒரே நேரத்தில் யானையும் பாம்பும் இறந்தன. வேடனும் இறந்தான். நரி ஒன்று அவ்வழியே வந்து அவற்றைக் கண்டு , அளவற்ற மகிழ்ச்சி கொண்டு, யானை ஆறுமாதத்திற்கு உணவாகும்; வேடனுடல் ஏழுநாட்களுக்கு உணவாகும்; பாம்பை ஒருநாளுக்கு உணவாக வைத்துக்கொள்வோம். இப்போது நம் பசிக்கு இவ்வேடன் கையில் இருக்கும் வில்லிலுள்ள நரம்பாலாகிய நாணைக் கடித்துச் சுவைத்துப் பசியைப் போக்கிக் கொள்வோம் என்று நினைத்து வில்லில் பூட்டியிருந்த நாணை ஆவலோடு சென்று கடித்தது. உடனே இழுத்துக் கட்டப் பட்டிருந்த நாணறுந்த வில் திடீரென நிமிர்ந்த வேகத்தில் நரியின் வாயைக் கிழித்தது. நரியின் எண்ணக் கோட்டைகள் இடிந்தன. நரியும் இறந்தது. மக்களின் மனக்கோட்டைகள் ஒன்று நினைக்க ஒன்றாய் முடிதலை இக்கதை விளக்குகின்றது. பழங்காலத்திலேயே இக்கதை வழங்கியதாகத் தெரிகிறது. பிற்காலத்திலும் திருத்தக்கதேவர் இக்கதையை விருத்தப் பாடலால் பாடியுள்ளார். கு-ரை: அருக்கன் - சூரியன். அரனுரு - அட்டமூர்த்த வடிவங்களில் ஒன்று. |
|