அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர், சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ- கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன், பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர், ழுஎரிச் சுற்றக் கிடந்தார்ழு என்று அயலவர் சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம், திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்? தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?- தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.