5.22 திருக்குடமூக்கு
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1285

பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு
ஆவணத்து உடையான், அடியார்களை;-
தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர்
கோவணத்து உடையான், குடமூக்கிலே.

1
உரை
பாடல் எண் :1286

பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர்,
தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ!-
ழுவேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க!ழு என்று
கூத்து ஆடி(ய்) உறையும் குடமூக்கிலே.

2
உரை
பாடல் எண் :1287

நங்கையாள் உமையாள் உறை நாதனார்-
அம் கையாளொடு அறுபதம் தாழ்சடைக்
கங்கையாள் அவள், கன்னி எனப்படும்
கொங்கையாள், உறையும் குடமூக்கிலே.

3
உரை
பாடல் எண் :1288

ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்,
ஏதானும்(ம்) இனிது ஆகும்; இயமுனை-
சேதா ஏறு உடையான் அமர்ந்த(வ்) இடம்-
கோதாவிரி உறையும் குடமூக்கிலே.

4
உரை
பாடல் எண் :1289

நக்க(அ)அரையனை, நாள்தொறும் நன் நெஞ்சே!
வக்கரை உறைவானை, வணங்கு, நீ!-
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன்,
கொக்கரை உடையான், குடமூக்கிலே.

5
உரை
பாடல் எண் :1290

துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்!
பிறவி நீங்கப் பிதற்றுமின், பித்தராய்-!
மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்ட எம்
குறவனார் உறையும் குடமூக்கிலே.

6
உரை
பாடல் எண் :1291

தொண்டர் ஆகித் தொழுது பணிமினோ,
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்!-
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக்
கொண்டவன்(ன்) உறையும் குடமூக்கிலே.

7
உரை
பாடல் எண் :1292

காமியம் செய்து காலம் கழியாதே,
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ!-
சாமியோடு, சர(ச்) சுவதி அவள்,
கோமியும்(ம்), உறையும் குடமூக்கிலே.

8
உரை
பாடல் எண் :1293

சிரமம் செய்து, சிவனுக்குப் பத்தராய்ப்
பரமனைப் பல நாளும் பயிற்றுமின்!-
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம்
குரவனார் உறையும் குடமூக்கிலே.

9
உரை
பாடல் எண் :1294

அன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின்
கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே.

10
உரை