5.23 திருநின்றியூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1295

கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப்
படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்-
நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க்
கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.

1
உரை
பாடல் எண் :1296

வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளை
நீதியே கொளப்பாலது?-நின்றியூர்
வேதம் ஓதி, விளங்கு வெண் தோட்டராய்,
காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே.

2
உரை
பாடல் எண் :1297

புற்றின் ஆர் அரவம் புலித்தோல்மிசைச்
சுற்றினார்; சுண்ணப் போர்வை கொண்டார்; சுடர்
நெற்றிக்கண் உடையார்; அமர் நின்றியூர்
பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.

3
உரை
பாடல் எண் :1298

பறையின் ஓசையும், பாடலின் ஓசையும்,
மறையின் ஓசையும், மல்கி அயல் எலாம்
நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.

4
உரை
பாடல் எண் :1299

சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்,
ழுஇனையன்ழு என்று என்றும் ஏசுவது என் கொலோ?
நினையும் தண்வயல் சூழ் திரு நின்றியூர்ப்
பனையின் ஈர் உரி போர்த்த பரமரே!

5
உரை
பாடல் எண் :1300

உரைப்பக் கேண்மின், நும் உச்சி உளான்தனை!
ழுநிரைப் பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர்
உரைப் பொன்கற்றையர் ஆர் இவரோ?ழு எனில்,
திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.

6
உரை
பாடல் எண் :1301

கன்றி ஊர் முகில் போலும் கருங்களிறு
இன்றி ஏறலனால்; இது என்கொலோ?
நின்றியூர் பதி ஆக நிலாயவன்,
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே.

7
உரை
பாடல் எண் :1302

நிலை இலா வெள்ளைமாலையன், நீண்டது ஓர்
கொலை விலால் எயில் எய்த கொடியவன்,
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்
உரையினால்-தொழுவார் வினை ஓயுமே.

8
உரை
பாடல் எண் :1303

அஞ்சி ஆகிலும் அன்பு பட்டு ஆகிலும்
நெஞ்சம்! வாழி! நினை, நின்றியூரை நீ!
இஞ்சிமா மதில் எய்து இமையோர் தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

9
உரை
பாடல் எண் :1304

எளியனா மொழியா இலங்கைக்கு இறை,
களியினால் கயிலாயம் எடுத்தவன்,
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர்
அளியினால்-தொழுவார் வினை அல்குமே.

10
உரை