நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை; மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்- பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு- துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.
தவளமாமதிச் சாயல் ஓர் சந்திரன் பிளவு சூடிய பிஞ்ஞகன், எம் இறை, அளவு கண்டிலள்; ஆவடுதண்துறைக் களவு கண்டனள் ஒத்தனள்-கன்னியே.
ழுபாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை ஓதி; என் உளம் கொண்டவன்; ஒண் பொருள் ஆதி-ஆவடுதண்துறை மேவிய சோதியே! சுடரே!ழு என்று சொல்லுமே.
கார்க் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்; வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து, இவள் ஆர்க் கொள் கொன்றையன்; ஆவடுதண்துறைத் தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே!
கருகு கண்டத்தன், காய் கதிர்ச் சோதியன், பருகு பால் அமுதே எனும் பண்பினன், அருகு சென்று இவள், ழுஆவடுதண்துறை ஒருவன் என்னை உடைய கோழு என்னுமே.
குழலும், கொன்றையும், கூவிளம், மத்தமும், தழலும், தையல் ஓர்பாகமாத் தாங்கினான்; அழகன்; ழுஆவடுதண்துறையா!ழு எனக் கழலும், கைவளை காரிகையாளுக்கே.
பஞ்சின் மெல் அடிப் பாவை ஓர்பங்கனைத் தஞ்சம் என்று இறுமாந்து, இவள் ஆரையும் அஞ்சுவாள் அல்லள்; ஆவடுதண்துறை மஞ்சனோடு இவள் ஆடிய மையலே!
ழுபிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என் நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்; அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை இறைவநென்னை உடையவன்ழு என்னுமே.
வையம் தான் அளந்தானும் அயனும் ஆய் மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்; ஐயன்; ழுஆவடுதண்துறையா!ழு என, கையில் வெள்வளையும் கழல்கின்றதே.
ழுபக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்; மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்; அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை நக்கன்ழு என்னும், இந் நாண் இலி; காண்மினே!