கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; சுருக்கும் ஆறு வல்லார், கங்கை செஞ்சடை;- பரப்பு நீர் வரு காவிரித் தென்கரைத் திருப் பராய்த்துறை மேவிய செல்வரே.
மூடினார், களியானையின் ஈர் உரி; பாடினார், மறை நான்கினோடு ஆறு அங்கம்; சேடனார்; தென்பராய்த்துறைச் செல்வரைத் தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே.
பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்; நட்டம் ஆடுவர், நள் இருள் ஏமமும்; சிட்டனார்-தென் பராய்த்துறைச் செல்வனார்; இட்டம் ஆய் இருப்பாரை அறிவரே.
முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர், என்பு எலாம் பல பூண்டு, அங்கு உழிதர்வர்- தென்பராய்த்துறை மேவிய செல்வனார்; அன்பராய் இருப்பாரை அறிவரே.
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன் தாது அவிழ் சடைச் சங்கரன் பாதத்துள், ழுவாதை தீர்க்க!ழு என்று ஏத்தி, பராய்த்துறைச் சோதியானைத் தொழுது, எழுந்து, உய்ம்மினே!
நல்ல நால்மறை ஓதிய நம்பனை, பல் இல் வெண்தலையில் பலி கொள்வனை, தில்லையான், தென்பராய்த்துறைச் செல்வனை, வல்லை ஆய் வணங்கித் தொழு, வாய்மையே!
நெருப்பினால் குவித்தால் ஒக்கும், நீள்சடை; பருப்பதம் மதயானை உரித்தவன், திருப் பராய்த்துறையார், திருமார்பின் நூல் பொருப்பு அராவி இழி புனல் போன்றதே.
எட்ட இட்ட இடு மணல் எக்கர்மேல் பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறைச் சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல், விட்டு, நம் வினை உள்ளன வீடுமே.
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை; மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும், வாள்மதி; திருப் பராய்த்துறை மேவிய செல்வனார் விருப்பராய் இருப்பாரை அறிவரே.
தொண்டு பாடியும், தூ மலர் தூவியும், இண்டை கட்டி இணை அடி ஏத்தியும், பண்டரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக் கண்டுகொண்டு, அடியேன் உய்ந்து போவனே.
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை, பரக்கும் நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை இருக்கை மேவிய ஈசனை, ஏத்துமின்! பொருக்க, நும்வினை போய் அறும்; காண்மினே!