துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும், நீர், இன்பம் வேண்டில், இராப்பகல் ஏத்துமின்! ழுஎன் பொன், ஈசன், இறைவன்ழு என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும்-ஆனைக்கா அண்ணலே.
வஞ்சம் இன்றி வணங்குமின்! வைகலும் வெஞ்சொல் இன்றி விலகுமின்! வீடு உற நைஞ்சு நைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம், ழுஅஞ்சல்!ழு என்றிடும்-ஆனைக்கா அண்ணலே.