5.33 திருச்சோற்றுத்துறை
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1396

கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்,
தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே
வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

1
உரை
பாடல் எண் :1397

முத்தி ஆக ஒரு தவம் செய்திலை;
அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை;
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே
பத்திஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

2
உரை
பாடல் எண் :1398

ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற,
தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே
பட்டிஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

3
உரை
பாடல் எண் :1399

ழுஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும்
நீதியான்ழு என்றும், ழுநின்மலனேழு என்றும்,
ழுசோதியான்ழு என்றும், சோற்றுத்துறையர்க்கே
வாதி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

4
உரை
பாடல் எண் :1400

ழுஆட்டினாய், அடியேன் வினை ஆயின
ஓட்டினாய்; ஒரு காதில் இலங்கு வெண்
தோட்டினாய்ழு என்று சோற்றுத்துறையர்க்கே
நீட்டி நீ பணி செய், மட நெஞ்சமே!

5
உரை
பாடல் எண் :1401

பொங்கி நின்று எழுந்த(க்) கடல் நஞ்சினைப்
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ? சொலாய்!
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்குத்
தங்கி நீ பணி செய், மட நெஞ்சமே!

6
உரை
பாடல் எண் :1402

ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்;
ஏணி போல் இழிந்து ஏறியும், ஏங்கியும்,
தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே
பூணி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

7
உரை
பாடல் எண் :1403

பெற்றம் ஏறில் என்? பேய் படை ஆகில் என்?
புற்றில் ஆடு அரவே அது பூணில் என்?
சுற்றி நீ, என்றும் சோற்றுத்துறையர்க்கே
பற்றி, நீ பணி செய், மட நெஞ்சமே!

8
உரை
பாடல் எண் :1404

அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்-
பள்ளியான், அறியாத பரிசு எலாம்
சொல்லி, நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
புல்லி, நீ பணி செய், மட நெஞ்சமே!

9
உரை
பாடல் எண் :1405

மிண்டரோடு விரவியும் வீறு இலாக்
குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து, நீ
தொண்டு செய்து, என்றும் சோற்றுத்துறையர்க்கே
உண்டு, நீ பணி செய், மட நெஞ்சமே!

10
உரை
பாடல் எண் :1406

வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்தனை
ஆழ்ந்து போய் அலற(வ்) விரல் ஊன்றினான்,
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே
தாழ்ந்து நீ பணி செய், மட நெஞ்சமே!

11
உரை