5.40 திருக்கழிப்பாலை
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1467

வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்;
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான், இவள் தன்மையே!

1
உரை
பாடல் எண் :1468

மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து
இருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான்,
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து, இவள்,
பரிந்து உரைக்கிலும், என் சொல் பழிக்குமே.

2
உரை
பாடல் எண் :1469

மழலைதான் வரச் சொல்-தெரிகின்றிலள்;
குழலின் நேர் மொழி கூறிய கேண்மினோ:
ழுஅழகனே! கழிப்பாலை எம் அண்ணலே!
இகழ்வதோ, எனை? ஏன்றுகொள்!ழு என்னுமே.

3
உரை
பாடல் எண் :1470

செய்ய மேனி வெண் நீறு அணிவான் தனை
மையல் ஆகி, மதிக்கிலள், ஆரையும்;
கை கொள் வெண் மழுவன், கழிப்பாலை எம்
ஐயனே அறிவான், இவள் தன்மையே.

4
உரை
பாடல் எண் :1471

கருத்தனை, கழிப்பாலையுள் மேவிய
ஒருத்தனை, உமையாள் ஒருபங்கனை,
ழுஅருத்தியால் சென்று கண்டிட வேண்டும்ழு என்று
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே.

5
உரை
பாடல் எண் :1472

ழுகங்கையைச் சடை வைத்து மலைமகள்-
நங்கையை உடனே வைத்த நாதனார்,
திங்கள் சூடி, திருக்கழிப்பாலையான்,
இங்கு வந்திடும்ழு என்று இறுமாக்குமே.

6
உரை
பாடல் எண் :1473

ழுஐயனே! அழகே! அனல் ஏந்திய
கையனே! கறை சேர்தரு கண்டனே!
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே, விதியே, அருள்!ழு என்னுமே.

7
உரை
பாடல் எண் :1474

பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை,
முத்தனை, முடிவு ஒன்று இலா மூர்த்தியை,
அத்தனை, அணி ஆர் கழிப்பாலை எம்
சித்தனை, சென்று சேருமா செப்புமே!

8
உரை
பாடல் எண் :1475

பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை-
அஞ்சும் நான்கும் ஒன்று(ம்) இறுத்தான் அவன்
என் செயான்? கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே.

9
உரை