ழுஎங்கே?ழு என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு, அங்கே வந்து, அடையாளம் அருளினார்; தெங்கே தோன்றும் திரு வாய்மூர்ச் செல்வனார் ழுஅங்கே வா!ழு என்று போனார்; அது என்கொலோ?
கழியக் கண்டிலேன்; கண் எதிரே கண்டேன்; ஒழியப் போந்திலேன்; ஒக்கவே ஓட்டந்தேன்; வழியில் கண்டிலேன்; வாய்மூர் அடிகள் தம் சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ?
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந் நின்றார்; மறைக்க வல்லரோ, தம்மைத் திரு வாய்மூர்ப் பிறைக் கொள் செஞ்சடையார்? இவர் பித்தரே!
தனக்கு ஏறாமை தவிர்க்க என்று வேண்டினும், நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன் எனக்கே வந்து எதிர் ழுவாய்மூருக்கேழு எனா, புனற்கே பொன்கோயில் புக்கதும் பொய்கொலோ?