5.62 திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1690

ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்
அருத்தனை, அடியேன் மனத்துள்(ள்) அமர்
கருத்தனை, கடுவாய்ப் புனல் ஆடிய
திருத்தனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.

1
உரை
பாடல் எண் :1691

யாவரும்(ம்) அறிதற்கு அரியான் தனை
மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை,
நாவின் நல் உரை ஆகிய நாதனை,
தேவனை, புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே.

2
உரை
பாடல் எண் :1692

அன்பனை, அடியார் இடர் நீக்கியை,
செம்பொனை, திகழும் திருக்கச்சி ஏ-
கம்பனை, கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
நம்பனை, கண்டு நான் உய்யப்பெற்றெனே.

3
உரை
பாடல் எண் :1693

மா தனத்தை, மா தேவனை, மாறு இலாக்
கோதனத்தில் ஐந்து ஆடியை, வெண்குழைக்
காதனை, கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
நாதனை, கண்டு நான் உய்யப் பெற்றெனே.

4
உரை
பாடல் எண் :1694

குண்டு பட்ட குற்றம் தவிர்த்து, என்னை ஆட்-
கொண்டு, நல்-திறம் காட்டிய கூத்தனை;
கண்டனை; கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
அண்டனை; கண்டு அருவினை அற்றெனே.

5
உரை
பாடல் எண் :1695

பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட
மைந்தனை(ம்), மணவாளனை, மா மலர்க்
கந்த நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
எந்தை ஈசனை, கண்டு இனிது ஆயிற்றே.

6
உரை
பாடல் எண் :1696

உம்பரானை, உருத்திர மூர்த்தியை,
அம்பரானை, அமலனை, ஆதியை,
கம்பு நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
எம்பிரானை, கண்டு இன்பம் அது ஆயிற்றே.

7
உரை
பாடல் எண் :1697

மாசு ஆர் பாசமயக்கு அறுவித்து, எனுள்
நேசம் ஆகிய நித்த மணாளனை,
ழுபூசம் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
ஈசனே!ழு என, இன்பம் அது ஆயிற்றே.

8
உரை
பாடல் எண் :1698

இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு
கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே,
கடுவாய்த்தென்கரைப்புத்தூர் அடிகட்கு ஆட்-
படவே பெற்று, நான் பாக்கியம் செய்தெனே.

9
உரை
பாடல் எண் :1699

அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு
இரக்கம் ஆகி அருள் புரி ஈசனை,
திரைக் கொள் நீர்க் கடுவாய்க்கரைத்தென்புத்தூர்
இருக்கும் நாதனை, காணப்பெற்று உய்ந்தெனே.

10
உரை