5.63 திருத்தென்குரங்காடுதுறை
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1700

இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-
புரம் காவல்(ல்) அழியப் பொடி ஆக்கினான்
தரங்கு ஆடும் தட நீர்ப் பொன்னித் தென்கரைக்
குரங்காடூதுறைக் கோலக் கபாலியே.

1
உரை
பாடல் எண் :1701

முத்தினை(ம்), மணியை, பவளத்து ஒளிர்-
தொத்தினை, சுடர்சோதியை, ழுசோலை சூழ்
கொத்து அலர் குரங்காடுதுறை உறை
அத்தன்ழு என்ன அண்ணித்திட்டு இருந்ததே.

2
உரை
பாடல் எண் :1702

குளிர்புனல் குரங்காடுதுறையனை
தளிர்நிறத் தையல் பங்கனை, தண்மதி
ஒளியனை(ந்), நினைந்தேனுக்கு என் உள்ளமும்
தெளிவினைத் தெளியத் தெளிந்திட்டதே.

3
உரை
பாடல் எண் :1703

மணவன் காண்; மலையாள் நெடு மங்கலக்
கணவன் காண்; கலை ஞானிகள் காதல் எண்-
குணவன் காண்; குரங்காடுதுறைதனில்
அணவன் காண், அன்புசெய்யும் அடியர்க்கே.

4
உரை
பாடல் எண் :1704

ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன்;
காலத்தான் உயிர் போக்கிய காலினன்;
நீலத்து ஆர் மிடற்றான்; வெள்ளை நீறு அணி
கோலத்தான் குரங்காடுதுறையனே.

5
உரை
பாடல் எண் :1705

ஆட்டினான், முன் அமணரோடு என்தனை;
பாட்டினான், தன பொன் அடிக்கு இன் இசை;
வீட்டினான், வினை; மெய் அடியாரொடும்
கூட்டினான் குரங்காடுதுறையனே.

6
உரை
பாடல் எண் :1706

மாத்தன்தான், மறையார் முறையால்; மறை-
ஓத்தன்; தாருகன் தன் உயிர் உண்ட பெண்
போத்தன்தான்; அவள் பொங்கு சினம் தணி
கூத்தன்தான் குரங்காடுதுறையனே.

7
உரை
பாடல் எண் :1707

நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்!
ஆடுமின்(ன்)! அழுமின்! தொழுமின்(ன்)! அடி
பாடுமின்! பரமன் பயிலும்(ம்) இடம்,
கூடுமின், குரங்காடுதுறையையே!

8
உரை
பாடல் எண் :1708

தென்றல் நன்நெடுந்தேர் உடையான் உடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்;
அன்று அவ் அந்தகனை அயில்சூலத்தால்
கொன்றவன் குரங்காடுதுறையனே.

9
உரை
பாடல் எண் :1709

நல்-தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம்
உற்ற நல்மொழியால் அருள்செய்த நல்
கொற்றவன் குரங்காடுதுறை தொழ,
பற்றும் தீவினை ஆயின பாறுமே.

10
உரை
பாடல் எண் :1710

கடுத்த தேர் அரக்கன் கயிலை(ம்) மலை
எடுத்த தோள்தலை இற்று அலற(வ்) விரல்
அடுத்தலும்(ம்), அவன் இன் இசை கேட்டு அருள்
கொடுத்தவன் குரங்காடுதுறையனே.

11
உரை