பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான் பிணி, இறப்பு, நீங்கிடும்; இன்பம் வந்து எய்திடும்- சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல் மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே.
ழுபொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான் வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான் திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதிழு என்பார்க்கு இடர் இல்லையே.