மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம், காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!
மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்! கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே, காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!