பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம், மின் உள்ளத் திரள் வெண்பிறையாய்! இறை நின் உள்ளத்து அருள் கொண்டு, இருள் நீங்குதல் என் உள்ளத்து உளது; எந்தைபிரானிரே!
முக்கணும்(ம்) உடையாய்! முனிகள் பலர் தொக்கு எணும் கழலாய்! ஒரு தோலினோடு அக்கு அணும்(ம்) அரையாய்! அருளே அலாது எக்கணும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!
பனிஆய் வெண்கதிர் பாய் படர் புன்சடை முனியாய்! நீ உலகம் முழுது ஆளினும், தனியாய், நீ; சரண், நீ;சலமே பெரிது; இனியாய், நீ எனக்கு; எந்தைபிரானிரே!
மறையும் பாடுதிர்; மா தவர் மாலினுக்கு உறையும் ஆயினை; கோள் அரவோடு ஒரு பிறையும் சூடினை; என்பது அலால், பிறிது இறையும் சொல் இலை-எந்தைபிரானிரே!
பூத்து ஆர் கொன்றையினாய்! புலியின்(ன்) அதள் ஆர்த்தாய், ஆடு அரவோடு! அனல் ஆடிய கூத்தா! நின் குரை ஆர் கழலே அலது ஏத்தா, நா எனக்கு; எந்தைபிரானிரே!
ழுபைம் மாலும்(ம்) அரவா! பரமா! பசு- மைம் மால் கண்ணியோடு-ஏறும் மைந்தா!ழு எனும் அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் எம்மாலும்(ம்) இலன் எந்தைபிரானிரே!
வெப்பத்தின் மன மாசு விளக்கிய செப்பத்தால், ழுசிவன்!ழு என்பவர் தீவினை ஒப்பத் தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது எப்பற்றும்(ம்) இலன் எந்தைபிரானிரே!
திகழும் சூழ் சுடர் வானொடு, வைகலும், நிகழும் ஒண் பொருள் ஆயின, நீதி, என் புகழும் ஆறும் அலால், நுன பொன் அடி இகழும் ஆறு இலன் எந்தைபிரானிரே!
கைப்பற்றித் திருமால் பிரமன்(ன்) உனை எய்ப் பற்றி(ய்) அறிதற்கு அரியாய்! அருள் அப் பற்று அல்லது, மற்று அடிநாயினேன் எப்பற்றும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!
ழுஎந்தை, எம்பிரான்ழு என்றவர்மேல் மனம், ழுஎந்தை, எம்பிரான்ழு என்று இறைஞ்சித் தொழுது, ழுஎந்தை, எம்பிரான்ழு என்று அடி ஏத்துவார், ழுஎந்தை, எம்பிரான்ழு என்று அடி சேர்வரே.