5.98 பொது
உள்ளத் திருக்குறுந்தொகை
பாடல் எண் :2056

நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை
ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை;
தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர்
ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

1
உரை
பாடல் எண் :2057

பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தையை, தழல் போல்வது ஓர் மேனியை,
சிந்தையை, தெளிவை, தெளி வாய்த்தது ஓர்
எந்தையை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

2
உரை
பாடல் எண் :2058

வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே
வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்,
கள்ளத்தைக் கழிய(ம்) மனம் ஒன்றி நின்று
உள்ளத்தில், ஒளியைக் கண்டது-என் உள்ளமே.

3
உரை
பாடல் எண் :2059

அம்மானை,-ழு அமுதின் அமுதே!ழு என்று-
தம்மானை, தத்துவத்து அடியார் தொழும்
செம் மான(ந்) நிறம் போல்வது ஓர் சிந்தையுள்
எம்மானை, கண்டுகொண்டது, என் உள்ளமே.

4
உரை
பாடல் எண் :2060

கூறு ஏறும்(ம்) உமை பாகம் ஓர் பாலராய்,
ஆறு ஏறும் சடைமேல் பிறை சூடுவர்,
பாறு ஏறும் தலை ஏந்திப் பல இலம்
ஏறு ஏறும் எந்தையைக் கண்டது-என் உள்ளமே.

5
உரை
பாடல் எண் :2061

முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்,
தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்;
வன் நெஞ்சம்(ம்) அது நீங்குதல் வல்லிரே?
என் நெஞ்சில் ஈசனைக் கண்டது-என் உள்ளமே.

6
உரை
பாடல் எண் :2062

வென்றானை, புலன் ஐந்தும்; என் தீவினை
கொன்றானை; குணத்தாலே வணங்கிட
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம்
ஒன்றானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

7
உரை
பாடல் எண் :2063

மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும்
குருவினை, குணத்தாலே வணங்கிடும்
திருவினை, சிந்தையுள் சிவனாய் நின்ற
உருவனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

8
உரை
பாடல் எண் :2064

தேசனை, திருமால் பிரமன் செயும்
பூசனை, புணரில் புணர்வு ஆயது ஓர்
நேசனை, நெஞ்சினுள் நிறைவு ஆய் நின்ற
ஈசனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

9
உரை
பாடல் எண் :2065

வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலை
அறுத்தானை; அரக்கன் கயிலாயத்தைக்
கறுத்தானைக் காலினில் விரல் ஒன்றினால்
ஒறுத்தானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

10
உரை