| 292 | ஏற்றானை, ஏழ் உலகும் ஆனான்தன்னை, ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்தன்னை, கூற்றானை, கூற்றம் உதைத்தான்தன்னை, கொடுமழுவாள் கொண்டது ஓர் கையான்தன்னை, காற்றானை, தீயானை, நீரும் ஆகி, கடி கமழும் புன்சடைமேல் கங்கைவெள்ள- ஆற்றானை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |