தொடக்கம் |
|
|
திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் ஆறாம் திருமுறை 6.1 கோயில் - பெரிய திருத் தாண்டகம் |
1 | அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை, அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும் தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை, தேவர்கள்தம் கோனை, மற்றைக் கரியானை, நான்முகனை, கனலை, காற்றை, கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|
|
|
|
|
2 | கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை, அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை, ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே; மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்- பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|
|
|
|
|
3 | கருமானின் உரி-அதளே உடையா வீக்கி, கனை கழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி, வரு மானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட, வளர்மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி அரு மான வாள் முகத்தாள் அமர்ந்து காண, அமரர்கணம் முடி வணங்க, ஆடுகின்ற பெருமானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|
|
|
|
|
4 | அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை, அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா- மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை, மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும் திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய பெருந்தகையை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|
|
|
|
|
5 | அருந்துணையை; அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை; அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான் புலன்கள் அகத்து அடக்கி, மடவாரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி, பொது நீக்கி, தனை நினைய வல்லோர்க்கு என்றும் பெருந்துணையை; பெரும்பற்றப்புலியூரானை;- பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|
|
|
|
|
6 | கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை, கன வயிரக் குன்று அனைய காட்சியானை, அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை, அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை, சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச் சுடர்க்கொழுந்தை, துளக்கு இல்லா விளக்கை, மிக்க பெரும்பொருளை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|
|
|
|
|
7 | வரும் பயனை, எழு நரம்பின் ஓசையானை, வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த அம்மானை, அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை, சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் -துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப் பெரும்பயனை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|
|
|
|
|
8 | கார் ஆனை ஈர் உரிவைப் போர்வையானை, காமரு பூங் கச்சி ஏகம்பன் தன்னை, ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை, அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை, பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை, பரனை, எண் இல் பேரானை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|
|
|
|
|
9 | முற்றாத பால் மதியம் சூடினானை, மூ உலகம் தான் ஆய முதல்வன் தன்னை, செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தன்னை, திகழ் ஒளியை, மரகதத்தை, தேனை, பாலை, குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை, கூத்து ஆட வல்லானை, கோனை, ஞானம் பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை,- பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|
|
|
|
|
10 | கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும், கடிக்கமலத்து இருந்த (அ)அயனும், காணா வண்ணம் சீர் ஒளிய தழல் பிழம்பு ஆய் நின்ற தொல்லைத், திகழ் ஒளியை; சிந்தை தனை மயக்கம் தீர்க்கும் ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும், ஏழ் உலகுங் கடந்தண்டத் அப்பால் நின்ற பேர் ஒளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப், சோத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|
|
|
|