தொடக்கம் |
|
|
6.3 திருஅதிகை வீரட்டானம் ஏழைத் திருத்தாண்டகம் |
22 | வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை, வெள் ஏற்றினானை, பொறி அரவினானை, புள் ஊர்தியானை, பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை, அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை, அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை, எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
23 | வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை, வில்வலான் வில்வட்டம் காய்ந்தான் தன்னை, புள்ளிவரிநாகம் பூண்டான் தன்னை, பொன் பிதிர்ந்தன்ன சடையான் தன்னை, வள்ளி வளைத் தோள் முதல்வன் தன்னை, வாரா உலகு அருள வல்லான் தன்னை, எள்க இடு பிச்சை ஏற்பான்தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
24 | முந்தி உலகம் படைத்தான் தன்னை, மூவா முதல் ஆய மூர்த்தி தன்னை, சந்த வெண்திங்கள் அணிந்தான் தன்னை, தவநெறிகள் சாதிக்க வல்லான்தன்னை, சிந்தையில்-தீர்வினையை, தேனை, பாலை, செழுங் கெடில வீரட்டம் மேவினானை, எந்தை பெருமானை, ஈசன் தன்னை, -ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
25 | மந்திரமும், மறைப் பொருளும், ஆனான்தன்னை; மதியமும், ஞாயிறும், காற்றும், தீயும், அந்தரமும், அலைகடலும், ஆனான் தன்னை; அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை; கந்தருவம் செய்து, இருவர், கழல் கைகூப்பி, கடிமலர்கள் பல தூவி, காலைமாலை. இந்திரனும் வானவரும் தொழ, செல்வானை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
26 | ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார்; உயர்கதிக்கு வழி தேடிப் போகமாட்டார்; வரு பிறப்பு ஒன்று உணராது, மாசு பூசி, வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி, அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகை ஊரன் அம்மான் தன் அடி இணையே அணைந்து வாழாது, இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
27 | ஆறு ஏற்க வல்ல சடையான் தன்னை; அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னை; கூறு ஏற்க, கூறு அமர, வல்லான் தன்னை; கோல் வளைக்கை மாதராள் பாகன்தன்னை; நீறு ஏற்கப் பூசும் அகலத்தானை; நின்மலன் தன்னை; நிமலன் தன்னை; ஏறு ஏற்க ஏறுமா வல்லான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
28 | குண்டு ஆக்கனாய் உழன்று, கையில் உண்டு, குவிமுலையார்தம் முன்னே நாணம் இன்றி, உண்டி உகந்து, அமணே நின்றார் சொல் கேட்டு, உடன் ஆகி, உழி தந்தேன், உணர்வு ஒன்று இன்றி; வண்டு உலவு கொன்றை அம்கண்ணியானை, வானவர்கள் ஏத்தப்படுவான் தன்னை, எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
29 | உறி முடித்த குண்டிகை தம் கையில்-தூக்கி, ஊத்தைவாய்ச் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்க(ன்)னாய், கறி விரவு நெய் சோறு கையில் உண்டு, கண்டார்க்குப் பொல்லாத காட்சி ஆனேன்; மறிதிரை நீர்ப்பவ்வம் நஞ்சு உண்டான் தன்னை, மறித்து ஒரு கால் வல்வினையேன், நினைக்க மாட்டேன்; எறிகெடில நாடர் பெருமான் தன்னை-ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
30 | நிறை ஆர்ந்த நீர்மை ஆய் நின்றான்தன்னை, நெற்றிமேல் கண் ஒன்று உடையான் தன்னை, மறையானை, மாசு ஒன்று இலாதான் தன்னை, வானவர்மேல் மலர் அடியை வைத்தான் தன்னை, கறையானை, காது ஆர் குழையான் தன்னை, கட்டங்கம் ஏந்திய கையான் தன்னை, இறையானை, எந்தைபெருமான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
31 | தொல்லை வான் சூழ் வினைகள் சூழப் போந்து தூற்றியேன்; ஆற்றியேன்; சுடர் ஆய் நின்று வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட, வானவர்க்கும் தானவர்க்கும், பெருமான் தன்னை கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக் குழலும் ஊதும் கோவலனும், நான்முகனும், கூடி எங்கும் எல்லை காண்பு அரியானை; எம்மான் தன்னை;- ஏழையேன்நான் பண்டு இகழ்ந்த ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
32 | முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால், “நம் தெய்வம்” என்று தீண்டி, தலை பறிக்கும் தன்மையர்கள் ஆகி நின்று, தவமே என்று அவம் செய்து, தக்கது ஓரார்; மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதன் அழியச் செற்ற சேவடியினானை, இலை மறித்த கொன்றை அம்தாரான் தன்னை,- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!. |
|
உரை
|
|
|
|