6.4 திருஅதிகை வீரட்டானம்
அடையாளத் திருத்தாண்டகம்
33சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச்
              சடாமகுடத்து இருத்துமே; சாமவேத-
கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே:
                        மெய்யனே; கனகமேனிப்
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு
                      ஏறுமே; பரமயோகி ஆமே;
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;-
          அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.
உரை
   
34ஏறு ஏறி ஏழ் உலகம் உழிதர்வானே; இமையவர்கள்
                    தொழுது ஏத்த இருக்கின்றானே;
பாறு ஏறு படுதலையில் பலி கொள்வானே; பட அரவம்
                       தடமார்பில் பயில்வித்தானே;
நீறு ஏறு செழும் பவளக்குன்று ஒப்பானே; நெற்றிமேல்
                      ஒற்றைக்கண் நிறைவித்தானே;
ஆறு ஏறு சடைமுடி மேல் பிறை வைத்தானே;-அவன்
                   ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
உரை
   
35முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே; முதல்
                ஆகி நடு ஆகி முடிவு ஆனானே;
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே; கதம்
             நாகம் கொண்டு ஆடும் காட்சியானே;
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே; பெரு
              நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆகி
அண்டத்துக்கு அப்பால் ஆய் இப் பாலானே;-
          அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
உரை
   
36செய்யனே; கரியனே, கண்டம்; பைங்கண் வெள்
          எயிற்று ஆடு அரவனே; வினைகள் போக
வெய்யனே; தண் கொன்றை மிலைத்த சென்னிச்
          சடையனே; விளங்கு மழுச் சூலம் ஏந்தும்
கையனே; காலங்கள் மூன்று ஆனானே; கருப்பு வில்
               தனிக் கொடும் பூண் காமற் காய்ந்த
ஐயனே; பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே;- அவன்
                 ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
உரை
   
37பாடுமே, ஒழியாமே நால்வேத(ம்)மும்; படர்சடைமேல்
                   ஒளி திகழப் பனி வெண்திங்கள்
சூடுமே; அரை திகழத் தோலும் பாம்பும் சுற்றுமே;
                 தொண்டைவாய் உமை ஓர் பாகம்
கூடுமே; குடமுழவம், வீணை, தாளம், குறுநடைய சிறு
                        பூதம் முழக்க, மாக்கூத்து
ஆடுமே; அம் தடக்கை அனல் ஏந்து(ம்)மே;- அவன்
                 ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
உரை
   
38ஒழித்திடுமே, உள்குவார் உள்ளத்து உள்ள உறு
        பிணியும் செறு பகையும்; ஒற்றைக்கண்ணால்
விழித்திடுமே, காமனையும் பொடி ஆய் வீழ;
          வெள்ளப் புனல் கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே; ஏழ் உலகும் தான் ஆகு(ம்)மே;
         இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பி(ன்)னால்
அழித்திடுமே; ஆதி மா தவத்து உளானே;- அவன்
                 ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
உரை
   
39குழலோடு, கொக்கரை, கைத்தாளம், மொந்தை,
          குறள்பூதம் முன் பாடத் தான் ஆடு(ம்)மே;
கழல் ஆடு திருவிரலால் கரணம்செய்து, கனவின்
             கண் திரு உருவம் தான் காட்டு(ம்)மே;
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடு(ம்)மே;-
                 ஈமப் புறங்காட்டில் ஏமம்தோறும்
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே;-அவன்
                 ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
உரை
   
40மால் ஆகி மதம் மிக்க களிறுதன்னை வதைசெய்து,
                 மற்று அதனின் உரிவை கொண்டு,
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம், வெம்
           புலால் கை கலக்க, மெய் போர்த்தானே;
கோலாலம் பட வரை நட்டு, அரவு சுற்றி,
     குரைகடலைத் திரை அலற, கடைந்து கொண்ட
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே;-அவன்
                 ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
உரை
   
41செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும்
        செஞ்சடை எம்பெருமானே; தெய்வம் நாறும்
வம்பின் நாள்மலர்க் கூந்தல் உமையாள் காதல்
          மணவாளனே; வலங்கை மழுவாள(ன்)னே:
நம்பனே; நால்மறைகள் தொழ நின்றானே;
         நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே; அண்ட கோசத்து உளானே;- அவன்
                 ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
உரை
   
42எழுந்த திரை நதித் துவலை நனைந்த திங்கள்
             இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே;
கொழும் பவளச்செங்கனிவாய்க் காமக்கோட்டி
  கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட
தழும்பு உளவே; வரைமார்பில் வெண்நூல் உண்டே;
             சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செந்திரு உருவில் வெண் நீற்றானே;-
           அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
உரை
   
43நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே;
                          நேர் ஒருவர் இல்லாதானே;
கொடி ஏறு கோல மா மணிகண்ட(ன்)னே; கொல்
                    வேங்கை அதளனே; கோவணவனே;
பொடி ஏறு மேனியனே; ஐயம் வேண்டிப் புவலோகம்
                             திரியுமே; புரிநூலானே;
அடியாரை அமருலகம் ஆள்விக்கு(ம்)மே;- அவன்
                     ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
உரை