6.7 திருஅதிகைவீரட்டானம்
காப்புத் திருத்தாண்டகம்
64செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
         சிற்றேமமும், பெருந் தண் குற்றால(ம்)மும்,
தில்லைச் சிற்றம்பலமும், தென்கூட(ல்)லும்,
         தென் ஆனைக்காவும், சிராப்பள்ளி(ய்)யும்,
நல்லூரும், தேவன்குடி, மருக(ல்)லும்,
        நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்-
கல்லலகு நெடும்புருவக் கபாலம் ஏந்திக்
          கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே.
உரை
   
65தீர்த்தப்புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
      திருக்கோவல்வீரட்டம், வெண்ணெய் நல்லூர்,
ஆர்த்து அருவி வீழ் சுனைநீர் அண்ணாமலை,
          அறையணி நல்லூரும்(ம்), அரநெறியும், -
ஏத்துமின்கள்! நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது,
                    இன்னம்பர், ஏகம்ப(ம்) மும்,
கார்த் தயங்கு சோலைக் கயிலாய (ம்)
     மும்-கண்நுதலான் தன்னுடைய காப்புக்களே.
உரை
   
66சிறை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருப்
                பாதிரிப்புலியூர், திரு ஆமாத்தூர்,
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற
      சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தான(ம்)மும், -
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று
                       அமுதர்-பழனம், நல்லம்,
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும்,
           கழுக்குன்றும்-தம்முடைய காப்புக்களே.
உரை
   
67திரை ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
                ஆரூர், தேவூர், திரு நெல்லிக்கா,
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும், ஓத்தூரும்,
                       மாற்பேறும், மாந்துறையும்,
வரை ஆர் அருவி சூழ் மாநதியும், மாகாளம்,
                     கேதாரம், மா மேரு(வ்)வும்-
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை
                         உறைவார் காப்புக்களே.
உரை
   
68செழு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
           திரிபுராந்தகம், தென் ஆர் தேவீச்சுரம்,
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும்,
           குடமூக்கும், கோகரணம், கோலக்காவும்,
பழி நீர்மை இல்லாப் பனங்காட்டூரும், பனையூர்,
                       பயற்றூர், பராய்த்துறையும்,
கழுநீர் மது விரியும் காளிங்க(ம்)மும் - 
               கணபதீச்சுரத்தார் தம் காப்புக்களே.
உரை
   
69தெய்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும், செழுந்
                  தண் பிடவூரும், சென்று நின்று
பவ்வம் திரியும் பருப்பத(ம்)மும், பறியலூர்
                          வீரட்டம், பாவநாசம்,
மவ்வம் திரையும் மணி முத்த(ம்)மும்,
          மறைக்காடும், வாய்மூர், வலஞ்சுழி(ய்)யும்,
கவ்வை வரிவண்டு பண்ணேபாடும்
             கழிப்பாலை-தம்முடைய காப்புக்களே.
உரை
   
70தெண் நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
             தீக்காலிவல்லம், திரு வேட்டி(ய்)யும்,
உண் நீர் ஆர் ஏடகமும், ஊறல், அம்பர்,
              உறையூர், நறையூர், அரண நல்லூர்,
விண்ணார் விடையான் விளமர், வெண்ணி,
                    மீயச்சூர், வீழிமிழலை, மிக்க
கண் ஆர் நுதலார் கரபுர(ம்)மும்-காபாலியார்
                        அவர்தம் காப்புக்களே.
உரை
   
71தெள்ளும் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
                 திண்டீச்சுரமும், திருப்புக(ல்)லூர்,
எள்ளும் படையான் இடைத்தான(ம்)மும்,
                  ஏயீச்சுரமும், நல் ஏமம், கூடல்,
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும், குரங்கணில்
                      முட்டமும், குறும்பலாவும்,
கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும்
             காரோணம்-தம்முடைய காப்புக்களே.
உரை
   
72சீர் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
           திருக்காட்டுப்பள்ளி, திரு வெண்காடும்,
பாரார் பரவும் சீர்ப் பைஞ்ஞீலியும்,
              பந்தணைநல்லூரும், பாசூர், நல்லம்,
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும்,
 நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வாயி(ல்)லும்,
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு 
         என்றும்-கடவூரில் வீரட்டம்-காப்புக்களே.
உரை
   
73சிந்தும் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
                  வாஞ்சியமும், திரு நள்ளாறும்,
அம் தண்பொழில் புடை சூழ் அயோகந்தியும்,
         ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட்டி(ய்)யும்,
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது(வ்)
          இடைச்சுரமும், எந்தை தலைச்சங்காடும்,
கந்தம் கமழும் கரவீர(ம்)மும், கடம்பூர்க்
                     கரக்கோயில்-காப்புக்களே.
உரை
   
74தேன் ஆர் புனல் கெடில வீரட்ட(ம்)மும், திருச்
              செம்பொன்பள்ளி, திருப் பூவணமும்,
வானோர் வணங்கும் மணஞ்சேரி(ய்)யும்,
               மதில் உஞ்சைமாகாளம், வாரணாசி,
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம், இலங்கு
        ஆர் பருப்பதத்தோடு, ஏண் ஆர் சோலைக்
கான் ஆர் மயில் ஆர் கருமாரி(ய்)யும் - 
           கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே.
உரை
   
75திரு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரு
              அளப்பூர், தெற்கு ஏறு சித்தவடம்,
உரு நீர் வளம் பெருகு மா நிருப(ம்)மும் -
         மயிலாப்பில் மன்னினார், மன்னி ஏத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற -
              பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம்
கருநீலவண்டு அரற்றும் காளத்தி(ய்)யும்,
             கயிலாயம்-தம்முடைய காப்புக்களே.
உரை