தொடக்கம் |
|
|
6.10 திருப்பந்தணைநல்லூர் திருத்தாண்டகம் |
97 | நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல் பூண்டார்;நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்; பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி;பிறை சூடும் சடைமேல் ஓர் புனலும் சூடி; ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார்;அனல் கொண்டார்;அந்திவாய் வண்ணம் கொண்டார்; பாதம் கம் நீறு ஏற்றார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
98 | காடு அலால் கருதாதார்;கடல்நஞ்சு உண்டார்;களிற்று உரிவை மெய் போர்த்தார்;கலன் அது ஆக; ஓடு அலால் கருதாதார்;ஒற்றியூரார்;உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக் கண்ணால் பீடு உலாம் தனை செய்வார்;பிடவம், மொந்தை, குடமுழவம், கொடுகொட்டி, குழலும், ஓங்கப் பாடலார்;ஆடலார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
99 | பூதப்படை உடையார்;பொங்கு நூலார்; புலித்தோல் உடையினார்;போர் ஏற்றி(ன்)னார்; வேதத்தொழிலார் விரும்ப நின்றார்; விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி, ஓதத்து ஒலி கடல்வாய் நஞ்சம் உண்டார்; உம்பரோடு அம்பொன்னுலகம் ஆண்டு பாதத்தொடு கழலார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
100 | நீர் உலாம் சடைமுடிமேல்-திங்கள் ஏற்றார்; நெருப்பு ஏற்றார், அங்கையில் நிறையும் ஏற்றார்; ஊர் எலாம் பலி ஏற்றார்;அரவம் ஏற்றார்; ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்; வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார்; மழு ஏற்றார்;மான்மறி ஓர் கையில் ஏற்றார்; பார் உலாம் புகழ் ஏற்றார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
101 | தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார்; துளங்கா மணி முடியார்; தூய நீற்றார்; இண்டைச் சடை முடியார்; ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார், ஏமம் தோறும்; அண்டத்துக்கு அப் புறத்தார்; ஆதி ஆனார்; அருக்கனாய், ஆர் அழல் ஆய், அடியார்மேலைப் பண்டை வினை அறுப்பார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
102 | கடம் மன்னு களியானை உரிவை போர்த்தார்; கானப்பேர் காதலார்; காதல்செய்து மடம் மன்னும் அடியார் தம் மனத்தின் உள்ளார்; மான் உரி தோல் மிசைத்தோளார்; மங்கை காண நடம் மன்னி ஆடுவார்; நாகம் பூண்டார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்; படம் மன்னு திருமுடியார்; பைங்கண்ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
103 | முற்றா மதிச் சடையார்; மூவர் ஆனார்; மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்; கற்றார்பரவும்கழலார்;திங்கள்,கங்கையாள்,காதலார்; காம்புஏய்தோளி பற்று ஆகும் பாகத்தார்; பால் வெண் நீற்றார்; பான்மையால் ஊழி, உலகம், ஆனார்; பற்றார் மதில் எரித்தார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
104 | கண் அமரும் நெற்றியார்; காட்டார்; நாட்டார்; கன மழுவாள் கொண்டது ஓர் கையார்; சென்னிப் பெண் அமரும் சடைமுடியார்; பேர் ஒன்று இல்லார்; பிறப்பு இலார்; இறப்பு இலார்; பிணி ஒன்று இல்லார்; மண்ணவரும், வானவரும், மற்றையோரும், மறையவரும், வந்து எதிரே வணங்கி ஏத்தப் பண் அமரும் பாடலார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
105 | ஏறு ஏறி ஏழ் உலகும் ஏத்த நின்றார்; இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்; நீறு ஏறு மேனியார்; நீலம் உண்டார்; நெருப்பு உண்டார்; அங்கை அனலும் உண்டார்; ஆறு ஏறு சென்னியார்; ஆன் அஞ்சு ஆடி; அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்; பாறு ஏறு வெண்தலையார், பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |
|
உரை
|
|
|
|
|
106 | கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார்; காரோணம் காதலார்; காதல்செய்து நல்லூரார்; ஞானத்தார்; ஞானம் ஆனார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்; மல் ஊர் மணி மலையின்மேல் இருந்து, வாள் அரக்கர்கோன் தலையை மாளச் செற்று, பல் ஊர் பலி திரிவார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |
|
உரை
|
|
|
|