தொடக்கம் |
|
|
6.13 திருப்புறம்பயம் திருத்தாண்டகம் |
127 | கொடி மாட நீள் தெருவு கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், தண் வளவி கண்டியூரும், நடம் ஆடும் நல் மருகல், வைகி; நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக; படு மாலை வண்டு அறையும் பழனம், பாசூர், பழையாறும், பாற்குளமும், கைவிட்டு, இந் நாள் பொடி ஏறும் மேனியராய்ப் பூதம் சூழ, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே! |
|
உரை
|
|
|
|
|
128 | முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி, முளைத்திங்கள் சூடி, முந்நூலும் பூண்டு, ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்று ஒன்றா எண்ணுகின்றார்; மற்று ஒருவர் இல்லை, துணை எனக்கு; மால் கொண்டால் போல மயங்குவேற்கு, புற்று அரவக் கச்சு ஆர்த்துப் பூதம் சூழ, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே! |
|
உரை
|
|
|
|
|
129 | ஆகாத நஞ்சு உண்ட அந்தி வண்ணர், ஐந்தலைய மாசுணம் கொண்டு, அம் பொன் தோள்மேல் ஏகாசமா இட்டு, ஓடு ஒன்று ஏந்தி வந்து(வ்), “இடு, திருவே, பலி!” என்றார்க்கு, இல்லே புக்கேன்; பாகு ஏதும் கொள்ளார்; பலியும் கொள்ளார்; பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி, போகாத வேடத்தர் பூதம் சூழ, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே! |
|
உரை
|
|
|
|
|
130 | பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி,-பனி முகில் போல் மேனிப் பவந்த நாதர்- நெல் மலிந்த நெய்த்தானம், சோற்றுத்துறை, நியமம், துருத்தியும், நீடூர், பாச்சில், கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம், கடல் நாகைக்காரோணம், கைவிட்டு, இந் நாள் பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே! |
|
உரை
|
|
|
|
|
131 | செத்தவர் தம் தலைமாலை கையில் ஏந்தி, சிரமாலை சூடி, சிவந்த மேனி மத்தகத்த யானை உரிவை மூடி, மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி, அத் தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி, புத்தகம் கைக் கொண்டு, புலித்தோல் வீக்கி, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே! |
|
உரை
|
|
|
|
|
132 | நஞ்சு அடைந்த கண்டத்தர், வெண் நீறு ஆடி, நல்ல புலி அதள்மேல் நாகம் கட்டி, பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக, “பராய்த்துறையேன்” என்று ஓர் பவள வண்ணர் துஞ்சு இடையே வந்து, துடியும் கொட்ட, துண்ணென்று எழுந்திருந்தேன்; சொல்லமாட்டேன்; புன்சடையின்மேல் ஓர் புனலும் சூடி, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே! |
|
உரை
|
|
|
|
|
133 | மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி, “மறைக்காட்டேன்” என்று ஓர் மழலை பேசி, செறி இலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு, திருமுண்டமா இட்ட திலக நெற்றி நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று, நெடுங்கண் பனி சோர, நின்று நோக்கி, பொறி இலங்கு பாம்பு ஆர்த்து, பூதம் சூழ, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே! |
|
உரை
|
|
|
|
|
134 | நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி, நிரைவளையார் பலி பெய்ய நிறையும் கொண்டு, கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டி(ய்)யும் குடமூக்கில் அங்கு ஒழிய, “குளிர் தண் பொய்கை நல்லாடை, நல்லூரே, தவிரேன்” என்று நறையூரில்- தாமும் தவிர்வார் போல, பொல்லாத வேடத்தர், பூதம் சூழ, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!. |
|
உரை
|
|
|
|
|
135 | விரை ஏறு நீறு அணிந்து, ஓர் ஆமை பூண்டு, வெண்தோடு பெய்து, இடங்கை வீணை ஏந்தி, திரை ஏறு சென்னிமேல்-திங்கள் தன்னைத் திசை விளங்க வைத்து, உகந்த செந்தீ வண்ணர், அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் புரை ஏறு தாம் ஏறி, பூதம் சூழ, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!. |
|
உரை
|
|
|
|
|
136 | கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆகக் குமரனும், விக்கின விநாயக(ன்)னும், பூ ஆய பீடத்து மேல் அய(ன்)னும், பூமி அளந்தானும், போற்று இசைப்ப; பா ஆய இன் இசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றி, பூ ஆர்ந்த கொன்றை பொறிவண்டு ஆர்க்க, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!. |
|
உரை
|
|
|
|