6.16 திருஇடைமருது
திருத்தாண்டகம்
159சூலப்படை உடையார் தாமே போலும்; சுடர்த
              திங்கள் கண்ணி உடையார் போலும்;
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும்;
           மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்;
வேலைக்-கடல் நஞ்சம் உண்டார் போலும்;
      மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்;
ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது
                             மேவிய ஈசனாரே.
உரை
   
160கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணிபோலும்;
      கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும்;
பாரார் பரவப்படுவார் போலும்; பத்துப்பல்
                          ஊழி பரந்தார் போலும்;
சீரால் வணங்கப்படுவார் போலும்; திசைஅனைத்தும்
                   ஆய், மற்றும் ஆனார் போலும்;
ஏர் ஆர் கமழ் குழலாள் பாகர் போலும்-இடைமருது
                              மேவிய ஈசனாரே!.
உரை
   
161வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்;
     விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்;
பூதங்கள் ஆய புராணர் போலும்;
         புகழ வளர் ஒளி ஆய் நின்றார் போலும்;
பாதம் பரவப்படுவார் போலும்; பத்தர்களுக்கு
                     இன்பம் பயந்தார் போலும்;
ஏதங்கள் ஆன கடிவார் போலும்-இடைமருது
                            மேவிய ஈசனாரே.
உரை
   
162திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித் திசை
         வணங்கச் சேவடியை வைத்தார் போலும்;
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி,
   வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும்;
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப்
              பரங்குன்றம் மேய பரமர் போலும்;
எண் குணத்தார்; எண்ணாயிரவர் போலும்-இடைமருது
                            மேவிய ஈசனாரே.
உரை
   
163ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர்
           பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்,
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி,
           படுவெண் தலையில் பலி கொள்வாரும்,
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும்,
       மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும்,
ஏகம்பம் மேயாரும், எல்லாம் ஆவார்-இடைமருது
                            மேவிய ஈசனாரே.
உரை
   
164ஐ-இரண்டும், ஆறு ஒன்றும், ஆனார் போலும்; அறு-மூன்றும்,
                     நால்-மூன்றும் ஆனார் போலும்;
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும்; திசை
              அனைத்தும் ஆய் நிறைந்த செல்வர் போலும்;
கொய் மலர் அம் கொன்றைச் சடையார் போலும்; கூத்து
                            ஆட வல்ல குழகர் போலும்;
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும்-இடைமருது
                            மேவிய ஈசனாரே.
உரை
   
165பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சு ஆய்,
   பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடு ஒன்று ஆய்,
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர்;
     விரிவு இலாக் குணம் நாட்டத்து ஆறே என்பர்;
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும்
         பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும்,
எரி ஆய தாமரைமேல் இயங்கினாரும்-இடைமருது
                             மேவிய ஈசனாரே.
உரை
   
166தோலின் பொலிந்த உடையார் போலும்; சுடர் வாய்
                 அரவு அசைத்த சோதி போலும்;
ஆலம் அமுதுஆக உண்டார்போலும்;
    அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனார் போலும்;
காலனையும் காய்ந்த கழலார் போலும்;
    கயிலாயம் தம் இடமாகக் கொண்டார் போலும்;
ஏலம் கமழ்குழலாள் பாகர் போலும்-இடைமருது
                            மேவிய ஈசனாரே.
உரை
   
167பைந்தளிர்க் கொன்றை அம்தாரார் போலும்;
       படைக்கணாள் பாகம் உடையார் போலும்;
அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்;
         அணி நீலகண்டம் உடையார் போலும்;
வந்த வரவும் செலவும் ஆகி, மாறாது என்
                உள்ளத்து இருந்தார் போலும்;
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும்-இடைமருது
                          மேவிய ஈசனாரே.
உரை
   
168கொன்றை அம் கூவிள மாலை தன்னைக்
   குளிர்சடைமேல் வைத்து உகந்த கொள்கையாரும்,
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு
               உருவம் ஆய் நின்ற நிமலனாரும்,
அன்று அ(வ்)வ் அரக்கன் அலறி வீழ
         அரு வரையைக் காலால் அழுத்தினாரும்,
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும்-இடைமருது
                          மேவிய ஈசனாரே.
உரை