தொடக்கம் |
|
|
6.18 திருப்பூவணம் திருத்தாண்டகம் |
179 | வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்; வளர் சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்; கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்; இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்; எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும்-பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
180 | ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்; அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்; ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்; ஒற்றை வெண் பிறை தோன்றும்; பற்றார் தம்மேல் சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்; செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த பூண் நாணும் அரை நாணும் பொலிந்து தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
181 | கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று சொல் ஆகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்; சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்; அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; ஐவகையால் நினைவார் பால் அமர்ந்து தோன்றும்; பொல்லாத புலால் எலும்பு பூண் ஆய்த் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
182 | படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்; நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்; உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்; புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
183 | மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும், மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்; இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்; இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்; கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில்- தோன்றும். புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
184 | பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட பல்மலரும், நறும்புகையும், பரந்து தோன்றும்; சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்னதிருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும்; ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று, போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும்-பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
185 | தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்; சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்; மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்; வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்; துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்; பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
186 | செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்; திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்; நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்; நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்; மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்; மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்; பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
187 | அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்; அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்- மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்; மணம் மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத் திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்; செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப் பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
188 | ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி, அன்று, தன் முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்; பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று, பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்; கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்; ங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
189 | ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ் உரு ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்; வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்; நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்; போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |
|
உரை
|
|
|
|