6.20 திருநள்ளாறு
திருத்தாண்டகம்
201ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) அல்லாத
                  சொல் உரைக்கத் தன் கை வாளால்
சேதித்த திருவடியை, செல்ல நல்ல சிவலோக நெறி
                            வகுத்துக் காட்டுவானை,
மா மதியை, மாது ஓர் கூறு ஆயினானை, மா மலர்மேல்
                          அயனோடு மாலும் காணா
நாதியை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன்
                   நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
உரை
   
202படையானை, பாசுபத வேடத்தானை, பண்டு
          அனங்கற் பார்த்தானை, பாவம் எல்லாம்
அடையாமைக் காப்பானை, அடியார் தங்கள் அரு
    மருந்தை, “ஆவா!” என்று அருள் செய்வானை,
சடையானை, சந்திரனைத் தரித்தான் தன்னை,
       சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின்
நடையானை, நம்பியை, நள்ளாற்றானை, -நான்
      அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
உரை
   
203பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த
              பராபரனை, பைஞ்ஞீலி மேவினானை,
அடல் அரவம் பற்றிக் கடைந்த நஞ்சை அமுது
                   ஆக உண்டானை, ஆதியானை,
மடல் அரவம் மன்னு பூங்கொன்றையானை,
       மாமணியை, மாணிக்குஆய்க் காலன் தன்னை
நடல் அரவம் செய்தானை, நள்ளாற்றானை,-நான்
        அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
உரை
   
204கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி, கங்கணமும்
                      காதில் விடு தோடும் இட்டு,
சுட்ட(அ)ங்கம் கொண்டு துதையப் பூசி,
              சுந்தரனாய்ச் சூலம் கை ஏந்தினானை;
பட்ட(அ)ங்கமாலை நிறையச் சூடி, பல்கணமும்
                           தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை, நள்ளாற்றானை,-நான்
        அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
உரை
   
205உலந்தார் தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு
       நொடியில் உழல்வானை, உலப்பு இல் செல்வம்
சிலந்தி தனக்கு அருள் செய்த தேவதேவை, திருச்
                சிராப்பள்ளி எம் சிவலோக(ன்)னை,
கலந்தார் தம் மனத்து என்றும் காதலானை,
             கச்சி ஏகம்பனை, கமழ் பூங்கொன்றை
நலம் தாங்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான்
        அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தஆறே!.
உரை
   
206குலம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னை,
          குலவரையின் மடப்பாவை இடப்பாலானை,
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டிக் கொண்ட
      மறையவனை, பிறை தவழ் செஞ்சடையினானை
சலம் கெடுத்துத் தயா மூல தன்மம் என்னும்
   தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலம் கொடுக்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான்
        அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
உரை
   
207பூ விரியும் மலர்க் கொன்றைச் சடையினானை,
            புறம்பயத்து எம்பெருமானை, புகலூரானை,
மா இரியக் களிறு உரித்த மைந்தன் தன்னை,
            மறைக்காடும் வலி வலமும் மன்னினானை,
தே இரியத் திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை,
            உதைத்து அவன் தன் சிரம் கொண்டானை,
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை,-நான்
           அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
உரை
   
208சொல்லானை, சுடர்ப் பவளச் சோதியானை, தொல்
              அவுணர் புரம் மூன்றும் எரியச் செற்ற
வில்லானை, எல்லார்க்கும் மேல் ஆனானை,
           மெல்லியலாள் பாகனை, வேதம் நான்கும்
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை,
                    காளத்தியானை, கயிலை மேய
நல்லானை, நம்பியை, நள்ளாற்றானை,-நான்
        அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
உரை
   
209குன்றாத மா முனிவன் சாபம் நீங்கக் குரை
           கழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர்
                அழல் வாய் ஓட்டி அடர்வித்தானை,
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்தன்னை,
   “சிவன் எம்பெருமான்” என்று இருப்பார்க்கு என்றும்
நன்று ஆகும் நம்பியை, நள்ளாற்றானை,-நான்
          அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே!.
உரை
   
210“இறவாதே வரம் பெற்றேன்” என்று மிக்க
        இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி,
உறவு ஆகி, இன் இசை கேட்டு, இரங்கி, மீண்டே
     உற்ற பிணி தவிர்த்து, அருள வல்லான் தன்னை;
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை; மா
          மதியம், மலர்க் கொன்றை, வன்னி, மத்தம்,
நறவு, ஆர் செஞ்சடையானை; நள்ளாற்றானை;-நான்
        அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
உரை