தொடக்கம் |
|
|
6.24 திருஆரூர் திருத்தாண்டகம் |
242 | கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான் காண்; அம்மான்காண்; ஆடு அரவு ஒன்று ஆட்டினான்காண்; அனல் ஆடிகாண்; அயில்வாய்ச்சூலத்தான்காண்; எம்மான்காண்; ஏழ் உலகும் ஆயினான்காண்; எரிசுடரோன்காண்; இலங்கும் மழுவாளன்காண்; செம் மானத்து ஒளி அன்ன மேனியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |
|
உரை
|
|
|
|
|
243 | ஊன் ஏறு படுதலையில் உண்டியான்காண்; ஓங்காரன்காண்; ஊழி முதல் ஆனான்காண்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறான்காண்; அண்டன்காண்; அண்டத்துக்கு அப்பாலன்காண்; மான் ஏறு கரதலத்து எம் மணிகண்டன்காண்; மா தவன்காண்; மா தவத்தின் விளைவு ஆனான்காண்; தேன் ஏறும் மலர்க்கொன்றைக்கண்ணியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |
|
உரை
|
|
|
|
|
244 | ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான்காண்; இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன்தான்காண்; தூ வணத்த சுடர்ச் சூலப்படையினான்காண்; சுடர்மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் தான்காண்; ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண்; அனல் ஆடிகாண்; அடியார்க்கு அமிர்து ஆனான்காண்; தீவணத்த திரு உருவின் கரி உருவன்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |
|
உரை
|
|
|
|
|
245 | கொங்கு வார் மலர்க்கண்ணிக் குற்றாலன்காண்; கொடுமழுவன்காண்; கொல்லைவெள் ஏற்றான்காண்; எங்கள்பால்-துயர் கெடுக்கும் எம்பிரான்காண்; ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான்காண்; பொங்கு மா கருங்கடல் நஞ்சு உண்டான் தான்காண்; பொன் தூண் காண்; செம்பவளத்திரள் போல்வான்காண்; செங்கண் வாள் அரா, மதியோடு உடன் வைத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |
|
உரை
|
|
|
|
|
246 | கார் ஏறு நெடுங்குடுமிக் கயிலாயன்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான்காண்; போர் ஏறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான்காண்; புண்ணியன்காண்; எண்ண(அ)ரும் பல் குணத்தினான்காண்; நீர் ஏறு சுடர்ச் சூலப்படையினான்காண்; நின்மலன்காண்; நிகர் ஏதும் இல்லாதான்காண்; சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |
|
உரை
|
|
|
|
|
247 | பிறை அரவக் குறுங்கண்ணிச் சடையினான்காண்; பிறப்பு இலிகாண்; பெண்ணோடு ஆண் ஆயினான்காண்; கறை உருவ மணிமிடற்று வெண் நீற்றான்காண்; கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீகாண்; இறை உருவக் கனவளையாள் இடப்பாகன்காண்; இரு நிலன்காண்; இரு நிலத்துக்கு இயல்பு ஆனான்காண்; சிறை உருவக் களி வண்டு ஆர் செம்மையான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |
|
உரை
|
|
|
|
|
248 | தலை உருவச் சிரமாலை சூடினான்காண்; தமர் உலகம் தலை கலனாப் பலி கொள்வான் காண்; அலை உருவச் சுடர் ஆழி ஆக்கினான்காண்; அவ் ஆழி நெடுமாலுக்கு அருளினான்காண்; கொலை உருவக் கூற்று உதைத்த கொள்கையான்காண்; கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான்காண்; சிலை உருவச் சரம் துரந்த திறத்தினான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |
|
உரை
|
|
|
|
|
249 | ஐயன்காண், குமரன்காண், ஆதியான்காண்; அடல் மழுவாள் தான் ஒன்று பியில்மேல் ஏந்து கையன்காண்; கடல் பூதப் படையினான்காண்; கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான்காண்; வெய்யன்காண்; தண்புனல் சூழ் செஞ்சடையான்காண்; வெண் நீற்றான்காண்; விசயற்கு அருள் செய்தான்காண்; செய்யன்காண்; கரியன்காண்; வெளியோன் தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |
|
உரை
|
|
|
|
|
250 | மலை வளர்த்த மடமங்கை பாகத்தான்காண்; மயானத்தான்காண்; மதியம் சூடினான்காண்; இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான்காண்; இறையவன்காண்; எறிதிரை நீர்நஞ்சு உண்டான்காண்; கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான்காண்; கொடுங்குன்றன்காண்; கொல்லை ஏற்றினான் காண்; சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |
|
உரை
|
|
|
|
|
251 | பொன்தாது மலர்க்கொன்றை சூடினான்காண்; புரிநூலன்காண்; பொடி ஆர் மேனியான்காண்; மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான்காண்; மறை ஓதி காண்; எறிநீர் நஞ்சு உண்டான்காண்; எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான்காண்-; இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன் தான்காண்; செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான் தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |
|
உரை
|
|
|
|