தொடக்கம் |
|
|
6.27 திருஆரூர் திருத்தாண்டகம் |
269 | பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள்! தீவினைகாள்! திருவே! நீங்கள் இம் மாயப்பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, கிடந்ததுதான்; யானேல், வானோர் தம்மானை, தலைமகனை, தண் நல் ஆரூர்த் தடங்கடலை, தொடர்ந்தோரை அடங்கச் செய்யும் எம்மான் தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன்; இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!. |
|
உரை
|
|
|
|
|
270 | ஐம்பெருமாபூதங்காள்! ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர்! ஈண்டு இவ் அவனி எல்லாம் உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே, நுகர் போகம்; யானேல், வானோர் உம்பரும் ஆய் ஊழியும் ஆய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல், வானோர்- தம் பெருமானாய் நின்ற அரனை, காண்பேன்; தடைப்படுவேனாக் கருதித் தருக்கேன்மி(ன்)னே!. |
|
உரை
|
|
|
|
|
271 | சில் உருவில் குறி இருத்தி, நித்தல் பற்றி, செழுங் கணால் நோக்கும் இது ஊகம் அன்று; பல் உருவில்-தொழில் பூண்ட பஞ்சபூதப்-பளகீர்! உம் வசம் அன்றே! யானேல், எல்லாம் சொல் உருவின் சுடர் மூன்று ஆய், உருவம் மூன்று ஆய், தூ நயனம் மூன்று ஆகி, ஆண்ட ஆரூர் நல் உருவில் சிவன் அடியே அடைவேன்; நும்மால் நமைப்புண்ணேன்; கமைத்து நீர் நடமின்க(ள்)ளே!. |
|
உரை
|
|
|
|
|
272 | உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர்! நுங்கள் மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு, ஐயோ! வையகமே போதாதே, யானேல், வானோர் பொன் உருவை, தென் ஆரூர் மன்னு குன்றை, புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை, புகுந்து என் சிந்தை தன் உருவைத் தந்தவனை, எந்தை தன்னை, தலைப்படுவேன்; துலைப் படுப்பான் தருக்கேன்மி(ன்)னே!. |
|
உரை
|
|
|
|
|
273 | துப்பினை முன் பற்று அறா விறலே! மிக்க சோர்வு படு சூட்சியமே! சுகமே! நீங்கள் ஒப்பனையைப் பாவித்து இவ் உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே; என் தன் வைப்பினை, பொன் மதில் ஆரூர் மணியை, வைகல் மணாளனை, எம்பெருமானை, வானோர் தங்கள் அப்பனை, செப்பட அடைவேன்; நும்மால் நானும் ஆட்டுணேன்; ஓட்டந்து, ஈங்கு அலையேன்மி(ன்)னே;. |
|
உரை
|
|
|
|
|
274 | பொங்கு மதமானமே! ஆர்வச் செற்றக்-குரோதமே! உலோபமே! பொறையே! நீங்கள் உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே? யானேல், அம் கமலத்து அயனொடு மால் ஆகி, மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி, அறிய ஒண்ணாச் செங்கனகத் தனிக் குன்றை, சிவனை, ஆரூர்ச் செல்வனை, சேர்வேன்; நும்மால் செலுத்துணேனே!. |
|
உரை
|
|
|
|
|
275 | இடர், பாவம் என, மிக்க துக்க, வேட்கை, வெறுப்பே, என்று அனைவீரும் உலகை ஓடிக் குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே? யானேல், வானோர்- அடையார் தம் புரம் மூன்றும் எரிசெய்தானை, அமரர்கள் தம் பெருமானை, அரனை, ஆரூர் உடையானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால் ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!. |
|
உரை
|
|
|
|
|
276 | விரைந்து ஆளும் நல்குரவே! செல்வே! பொல்லா வெகுட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள் நிரந்து ஓடி மா நிலத்தை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, நுகர் போகம்? யானேல், வானோர் கரைந்து ஓட வரு நஞ்சை அமுதுசெய்த கற்பகத்தை, தற்பரத்தை, திரு ஆரூரில் பரஞ்சோதிதனை, காண்பேன்; படேன், நும் பண்பில்; பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்மி(ன்)னே!. |
|
உரை
|
|
|
|
|
277 | மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச- முகரிகாள்! முழுதும் இவ் உலகை ஓடி நாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே? யானேல், வானோர் நீள் வானமுகடு அதனைத் தாங்கி நின்ற நெடுந்தூணை, பாதாளக் கருவை, ஆரூர் ஆள்வானை, கடுகச் சென்று அடைவேன்; நும்மால் ஆட்டுணேன்; ஓட்டந்து ஈங்கு அலையேன்மி(ன்)னே!. |
|
உரை
|
|
|
|
|
278 | சுருக்கமொடு, பெருக்கம், நிலை நிற்றல், பற்றித் துப்பறை என்று அனைவீர்! இவ் உலகை ஓடிச் செருக்கி மிகை செலுத்தி உம செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே? யானேல், மிக்க, தருக்கி மிக வரை எடுத்த, அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன் தன் பாடல் கேட்டு(வ்) இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன்மி(ன்)னே!. |
|
உரை
|
|
|
|