6.36 திருப்பழனம்
திருத்தாண்டகம்
360அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே;
        அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே;
கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல்
       வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே;
சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய்
              களைந்து என்னை ஆண்டார் தாமே;
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர்
                            எம்பிரானார் தாமே.
உரை
   
361வெள்ளம் ஒரு சடைமேல் ஏற்றார் தாமே; மேலார்கள்
                      மேலார்கள் மேலார் தாமே;
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார் தாமே; கருத்து
                    உடைய பூதப்படையார் தாமே;
உள்ளத்து உவகை தருவார் தாமே உறு நோய் சிறு
                        பிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவை நஞ்சு உண்டார் தாமே பழன நகர்
                            எம்பிரானார் தாமே.
உரை
   
362இரவும் பகலும் ஆய் நின்றார் தாமே; எப்போதும்
                 என் நெஞ்சத்து உள்ளார் தாமே;
அரவம் அரையில் அசைத்தார் தாமே; அனல் ஆடி
                       அங்கை மறித்தார் தாமே;
குரவம் கமழும் குற்றாலர் தாமே; கோலங்கள் மேல்
                         மேல் உகப்பார் தாமே;
பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே பழனநகர்
                            எம்பிரானார் தாமே.
உரை
   
363மாறு இல் மதில் மூன்றும் எய்தார் தாமே; வரி
             அரவம் கச்சு ஆக ஆர்த்தார் தாமே;
நீறு சேர் திருமேனி நிமலர் தாமே; நெற்றி நெருப்புக்
                          கண் வைத்தார் தாமே;
ஏறு கொடுஞ் சூலக் கையார் தாமே; என்பு
                    ஆபரணம் அணிந்தார் தாமே;
பாறு உண் தலையில் பலியார் தாமே பழனநகர்
                             எம்பிரானார் தாமே.
உரை
   
364சீரால் வணங்கப்படுவார் தாமே; திசைக்கு எல்லாம்
                      தேவு ஆகி நின்றார் தாமே;
ஆரா அமுதம் ஆனார் தாமே; அளவு இல்
                      பெருமை உடையார் தாமே;
நீர் ஆர் நியமம் உடையார் தாமே; நீள்வரை வில்
                        ஆக வளைத்தார் தாமே;
பாரார் பரவப்படுவார் தாமே பழனநகர் எம்பிரானார்
                                       தாமே.
உரை
   
365காலன் உயிர் வௌவ வல்லார் தாமே; கடிது ஓடும்
                     வெள்ளை விடையார் தாமே;
கோலம் பலவும் உகப்பார் தாமே; கோள் நாகம்
                   நாண் ஆகப் பூண்டார் தாமே;
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே; நீள்வரையின்
                         உச்சி இருப்பார் தாமே;
பால விருத்தரும் ஆனார் தாமே பழனநகர்
                            எம்பிரானார் தாமே.
உரை
   
366ஏய்ந்த உமை நங்கை பங்கர் தாமே; ஏழ் ஊழிக்கு
                  அப் புறம் ஆய் நின்றார் தாமே;
ஆய்ந்து மலர் தூவ நின்றார் தாமே; அளவு இல்
                      பெருமை உடையார் தாமே;
தேய்ந்த பிறை சடைமேல் வைத்தார் தாமே; தீ
           வாய் அரவு அதனை ஆர்த்தார் தாமே;
பாய்ந்த படர் கங்கை ஏற்றார் தாமே பழனநகர்
                            எம்பிரானார் தாமே.
உரை
   
367ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே; உள் ஊறும்
                       அன்பர் மனத்தார் தாமே;
பேராது என் சிந்தை இருந்தார் தாமே; பிறர்க்கு
               என்றும் காட்சிக்கு அரியார் தாமே;
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார் தாமே; உலகை
                     நடுங்காமல் காப்பார் தாமே;
பார் ஆர் முழவத்து இடையார் தாமே பழனநகர்
                            எம்பிரானார் தாமே.
உரை
   
368நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார் தாமே;
           நேரிழையை ஒரு பாகம் வைத்தார் தாமே;
பூண்டு அரவைப் புலித்தோல் மேல் ஆர்த்தார் தாமே;
            பொன் நிறத்த வெள்ளச்சடையார் தாமே;
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்
   தாமே; அங்கு அங்கே சிவம் ஆகி நின்றார் தாமே;
பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே
                     பழனநகர் எம்பிரானார் தாமே.
உரை
   
369விடை ஏறி, வேண்டு உலகத்து இருப்பார் தாமே;
           விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே;
புடை சூழ் தேவர் குழாத்தார் தாமே; பூந்துருத்தி,
                     நெய்த்தானம், மேயார் தாமே;
அடைவே புனல் சூழ் ஐயாற்றார் தாமே;
          அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே;
படையாப் பல்பூதம் உடையார் தாமே பழனநகர்
                             எம்பிரானார் தாமே.
உரை