தொடக்கம் |
|
|
6.37 திருஐயாறு திருத்தாண்டகம் |
370 | “ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி! ஆரமுதே!” என்றேன், நானே; “கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள் பூதப்பல் படையாய்!” என்றேன், நானே; “பேர் ஆயிரம் உடையாய்!” என்றேன், நானே; “பிறை சூடும் பிஞ்ஞகனே!” என்றேன், நானே; “ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |
|
உரை
|
|
|
|
|
371 | “தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா! புராணனே!” என்றேன், நானே; “மூவா மதிசூடி!” என்றேன், நானே; “முதல்வா! முக்கண்ணனே!” என்றேன், நானே; “ஏ ஆர் சிலையானே!” என்றேன், நானே; இடும்பைக்கடல் நின்றும் ஏற வாங்கி, “ஆவா!” என்று அருள்புரியும் ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |
|
உரை
|
|
|
|
|
372 | “அம் சுண்ண வண்ணனே!” என்றேன், நானே; “அடியார்கட்கு ஆர் அமுதே!” என்றேன், நானே; “நஞ்சு அணி கண்டனே!” என்றேன், நானே; “நாவலர்கள் நால்மறையே!” என்றேன், நானே; “நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே!” என்றேன், நானே; “அஞ்சாதே ஆள்வானே! ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |
|
உரை
|
|
|
|
|
373 | “தொல்லைத் தொடு கடலே!” என்றேன், நானே; “துலங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே; “எல்லை நிறைந்தானே!” என்றேன், நானே; “ஏழ்நரம்பின் இன் இசையாய்!” என்றேன், நானே; “அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய்!” என்றேன், நானே; “எல்லை ஆம் ஐயாறா!” என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |
|
உரை
|
|
|
|
|
374 | “இண்டைச் சடைமுடியாய்!” என்றேன், நானே; “இருசுடர் வானத்தாய்!” என்றேன், நானே; “தொண்டர் தொழப்படுவாய்!” என்றேன், நானே; “துருத்தி நெய்த்தானத்தாய்!” என்றேன், நானே; “கண்டம் கறுத்தானே!” என்றேன், நானே; “கனல் ஆகும் கண்ணானே!” என்றேன், நானே; “அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |
|
உரை
|
|
|
|
|
375 | “பற்றார் புரம் எரித்தாய்!” என்றேன், நானே; “பசுபதீ! பண்டரங்கா!” என்றேன், நானே; “கற்றார்கள் நாவினாய்!” என்றேன், நானே; “கடு விடை ஒன்று ஊர்தியாய்!” என்றேன், நானே; “பற்று ஆனார் நெஞ்சு உளாய்!” என்றேன், நானே; “பார்த்தற்கு அருள்செய்தாய்!” என்றேன், நானே; “அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |
|
உரை
|
|
|
|
|
376 | “விண்ணோர் தலைவனே!” என்றேன், நானே; “விளங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே; “எண்ணார் எயில் எரித்தாய்!” என்றேன், நானே; “ஏகம்பம் மேயானே!” என்றேன், நானே; “பண் ஆர் மறை பாடி!” என்றேன், நானே; “பசுபதீ! பால்நீற்றாய்!” என்றேன், நானே; “அண்ணா! ஐயாறனே!” என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |
|
உரை
|
|
|
|
|
377 | “அவன்” என்று நான் உன்னை அஞ்சாதேனை “அல்லல் அறுப்பானே!” என்றேன், நானே; “சிவன்” என்று நான் உன்னை எல்லாம் சொல்ல, “செல்வம் தருவானே!” என்றேன், நானே; “பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய்!” என்றேன், நானே; “அவன்” என்றே, “ஆதியே! ஐயாற(ன்)னே!”என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே! |
|
உரை
|
|
|
|
|
378 | “கச்சி ஏகம்பனே!” என்றேன், நானே; “கயிலாயா! காரோணா!” என்றேன், நானே; “நிச்சல் மணாளனே!” என்றேன், நானே; “நினைப்பார் மனத்து உளாய்!” என்றேன், நானே; “உச்சம் போது ஏறு ஏறீ!” என்றேன், நானே; “உள்குவார் உள்ளத்தாய்!” என்றேன், நானே; “அச்சம் பிணி தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |
|
உரை
|
|
|
|
|
379 | “வில் ஆடி வேடனே!” என்றேன், நானே; “வெண்நீறு மெய்க்கு அணிந்தாய்!” என்றேன், நானே; “சொல் ஆய சூழலாய்!” என்றேன், நானே; “சுலா ஆய தொன்னெறியே!” என்றேன், நானே; “எல்லாம் ஆய் என் உயிரே!” என்றேன், நானே; “இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்!” என்றேன், நானே; “அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்றுஎன்றே நான் அரற்றி நைகின்றேனே!. |
|
உரை
|
|
|
|