தொடக்கம் |
|
|
6.39 திருமழபாடி திருத்தாண்டகம் |
391 | நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்; கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்; கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்; ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்; மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே. |
|
உரை
|
|
|
|
|
392 | கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்; கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்; அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய்; அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்; அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்; மற்று இருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
393 | நெற்றித் தனிக் கண் உடையான் கண்டாய்; நேரிழை ஓர் பாகம் ஆய் நின்றான் கண்டாய்; பற்றிப் பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய்; பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய்; செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய்; செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்; மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
394 | அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்; அண்டத்துக்கு அப்பால் ஆய் நின்றான் கண்டாய்; கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய்; கொல் வேங்கைத் தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்; சிலையால்-திரிபுரங்கள் செற்றான் கண்டாய்; செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்; மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
395 | உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்; உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்; நலம் திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்; நால்வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்; உலந்தார் தலை கலனாக் கொண்டான் கண்டாய்; உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய் மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
396 | தாமரையான் தன் தலையைச் சாய்த்தான் கண்டாய்; தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டாய்; பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்! புணர்ச்சிப் பொருள் ஆகி நின்றான் கண்டாய்; ஏ மருவு வெஞ்சிலை ஒன்று ஏந்தி கண்டாய்; இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்; மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
397 | நீர் ஆகி, நெடுவரைகள் ஆனான் கண்டாய்; நிழல் ஆகி, நீள் விசும்பும் ஆனான் கண்டாய்; பார் ஆகி, பௌவம் ஏழ் ஆனான் கண்டாய்; பகல் ஆகி, வான் ஆகி, நின்றான் கண்டாய்; ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய்; அணு ஆகி, ஆதி ஆய், நின்றான் கண்டாய்; வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
398 | பொன் இயலும் திருமேனி உடையான் கண்டாய்; பூங்கொன்றைத்தார் ஒன்று அணிந்தான் கண்டாய்; மின் இயலும் வார்சடை எம்பெருமான் கண்டாய்; வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான் கண்டாய்; தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய்; தாங்க (அ)ரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்; மன்னிய மங்கை ஓர் கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
399 | ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய்; அடையலர் தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்; காலால் அக் காலனையும் காய்ந்தான் கண்டாய்; கண்ணப்பர்க்கு அருள் செய்த காளை கண்டாய்; பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய்; பசு ஏறிப் பலி திரியும் பண்பன் கண்டாய்; மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|
|
400 | ஒரு சுடர் ஆய், உலகு ஏழும் ஆனான் கண்டாய்; ஓங்காரத்து உள் பொருள் ஆய் நின்றான் கண்டாய்; விரி சுடர் ஆய், விளங்கு ஒளி ஆய், நின்றான் கண்டாய்; விழவு ஒலியும், வேள்வொலியும், ஆனான் கண்டாய்; இரு சுடர் மீது ஓடா இலங்கைக்கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய்; மரு சுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |
|
உரை
|
|
|
|