6.40 திருமழபாடி
திருத்தாண்டகம்
401அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு,
      அமரர்கள் தம் தலை காத்த ஐயர்; செம்பொன்
சிலை எடுத்து மா நாகம் நெருப்புக் கோத்துத்
            திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்;
“நிலை அடுத்த பசும் பொன்னால், முத்தால், நீண்ட
         நிரை வயிரப் பலகையால், குவையாத் துற்ற
மலை அடுத்த மழபாடி வயிரத்தூணே!” என்று
               என்றே நான் அரற்றி நைகின்றேனே.
உரை
   
402அறை கலந்த குழல், மொந்தை, வீணை, யாழும்,
             அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த,
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார்
                 வான் ஆளக் கொடுத்தி அன்றே!
“கறை கலந்த பொழில் கச்சிக் கம்பம் மேய கன
            வயிரத் திரள் தூணே! கலி சூழ் மாடம்
மறை கலந்த மழபாடி வயிரத்தூணே!” என்று என்றே
                     நான் அரற்றி நைகின்றேனே.
உரை
   
403உரம் கொடுக்கும் இருள் மெய்யர், மூர்க்கர், பொல்லா
      ஊத்தைவாய்ச் சமணர் தமை உறவாக் கொண்ட
பரம் கெடுத்து, இங்கு அடியேனை ஆண்டு கொண்ட
      பவளத்தின் திரள் தூணே! பசும்பொன் முத்தே!
“புரம் கெடுத்து, பொல்லாத காமன் ஆகம் பொடி
        ஆக விழித்து அருளி, புவியோர்க்கு என்றும்
வரம் கொடுக்கும் மழபாடி வயிரத்தூணே!” என்று
               என்றே நான் அரற்றி நைகின்றேனே.
உரை
   
404“ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர், பொல்லா
      ஊத்தைவாய்ச் சமணர் உறவு ஆகக் கொண்டு
ஞான(அ)கம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா
      நாயேனைப் பொருள் ஆக ஆண்டு கொண்ட,
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும்
       வேந்தனே! விண்ணவர் தம் பெருமான்! மேக
வானகம் சேர் மழபாடி வயிரத்தூணே!” என்று
              என்றே நான் அரற்றி நைகின்றேனே.
உரை
   
405சிரம் ஏற்ற நான்முகன் தன் தலையும் மற்றைத்
     திருமால் தன் செழுந் தலையும் பொன்றச் சிந்தி,
உரம் ஏற்ற இரவி பல்-தகர்த்து, சோமன்
          ஒளிர்கலைகள் பட உழக்கி, உயிரை நல்கி,
நரை ஏற்ற விடை ஏறி, நாகம் பூண்ட நம்பியையே,
                     “மறை நான்கும் ஓலம் இட்டு
வரம் ஏற்கும் மழபாடி வயிரத்தூணே!” என்று என்றே
                      நான் அரற்றி நைகின்றேனே.
உரை
   
406சினம் திருத்தும் சிறுப் பெரியார் குண்டர் தங்கள்
      செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன்; தேடிப்
புனம் திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறி
      இலியேன் தனைப் பொருளா ஆண்டு கொண்டு,
தனம் திருத்துமவர் திறத்தை ஒழியப் பாற்றி, தயா
                    மூலதன் மவழி எனக்கு நல்கி,
மனம் திருத்தும் மழபாடி வயிரத்தூணே!” என்று
               என்றே நான் அரற்றி நைகின்றேனே.
உரை
   
407“சுழித் துணை ஆம் பிறவி வழித் துக்கம் நீக்கும்
         சுருள் சடை எம்பெருமானே! தூய தெண்நீர்
இழிப்ப(அ)ரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என்
        துணையே! என்னுடைய பெம்மான்! தம்மான்!
பழிப்ப(அ)ரிய திருமாலும் அயனும் காணாப் பருதியே!
               சுருதி முடிக்கு அணி ஆய் வாய்த்த,
வழித்துணை ஆம், மழபாடி வயிரத்தூணே!” என்று
               என்றே நான் அரற்றி நைகின்றேனே.
உரை