தொடக்கம் |
|
|
6.44 திருச்சோற்றுத்துறை திருத்தாண்டகம் |
438 | மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால் எல்லாம் படைக்கின்றானே! ஏத்து அவனாய் ஏழ் உலகும் ஆயினானே! இன்பனாய்த் துன்பம் களைகின்றானே! காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே! கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |
|
உரை
|
|
|
|
|
439 | தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே! தத்துவனாய்ச் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே! நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே! நின்று உணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த கொலையவனே! கொல் யானைத் தோல் மேல் இட்ட கூற்றுவனே! கொடி மதில்கள் மூன்றும் எய்த சிலையவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |
|
உரை
|
|
|
|
|
440 | முற்றாத பால் மதியம் சூடினானே! முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே! உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே! உலகு ஓம்பும் ஒண்சுடரே! ஓதும் வேதம், கற்றானே, எல்லாக் கலைஞான(ம்)மும்! கல்லாதேன் தீவினை நோய் கண்டு போகச் செற்றானே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |
|
உரை
|
|
|
|
|
441 | கண்ணவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே! காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே! விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே! வேதனாய் வேதம் விரித்திட்டானே! எண்ணவனே! எண்ணார் புரங்கள் மூன்றும் இமையாமுன் எரி கொளுவ நோக்கி நக்க திண்ணவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |
|
உரை
|
|
|
|
|
442 | நம்பனே! நால் மறைகள் ஆயினானே! நடம் ஆட வல்லானே! ஞானக்கூத்தா! கம்பனே! கச்சி மா நகர் உளானே! கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த அம்பனே! அளவு இலாப் பெருமையானே! அடியார்கட்கு ஆர் அமுதே! ஆன் ஏறு ஏறும் செம்பொனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |
|
உரை
|
|
|
|
|
443 | ஆர்ந்தவனே! உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே! அளவு இலாப் பெருமையானே! கூர்ந்தவனே! குற்றாலம் மேய கூத்தா! கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்திப் பேர்ந்தவனே! “பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான்!” என்று எப்போதும் பேசும் நெஞ்சில் சேர்ந்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |
|
உரை
|
|
|
|
|
444 | வானவனாய் வண்மை மனத்தினானே! மா மணி சேர் வானோர் பெருமான், நீயே; கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே! கடிய அரணங்கள் மூன்று அட்டானே! தானவனாய்த் தண் கயிலை மேவினானே! தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும் தேனவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |
|
உரை
|
|
|
|
|
445 | தன்னவனாய், உலகு எல்லாம் தானே ஆகி, தத்துவனாய், சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே! என்னவனாய், என் இதயம் மேவினானே! ஈசனே! பாச வினைகள் தீர்க்கும் மன்னவனே! மலை மங்கை பாகம் ஆக வைத்தவனே! வானோர் வணங்கும் பொன்னித் தென்னவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |
|
உரை
|
|
|
|
|
446 | எறிந்தானே! எண் திசைக்கும் கண் ஆனானே! ஏழ் உலகம் எல்லாம் முன் ஆய் நின்றானே! அறிந்தார் தாம் ஓர் இருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே பிறிந்தானே! “பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான்!” என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில் செறிந்தானே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |
|
உரை
|
|
|
|
|
447 | மை அனைய கண்டத்தாய்! மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ணச் சூலக் கையவனே! கடி இலங்கைக் கோனை, அன்று, கால் விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற மெய்யவனே! அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே! விண்ணப்பம் கேட்டு நல்கும் செய்யவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |
|
உரை
|
|
|
|