தொடக்கம் |
|
|
6.48 திருவலிவலம் திருத்தாண்டகம் |
479 | நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் காண், நம்பன் காண், நணுகாதார் புரம் மூன்று எய்த வில்லான் காண், விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண், மெல்லியலாள் பாகன் காண், வேத வேள்விச் சொல்லான் காண், சுடர் மூன்றும் ஆயினான் காண், தொண்டு ஆகிப் பணிவார்க்குத் தொல் வான் ஈய வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
480 | ஊனவன் காண், உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண், உள்ளவன் காண், இல்லவன் காண், உமையாட்கு என்றும் தேன் அவன் காண், திரு அவன் காண், திசை ஆனான் காண், தீர்த்தன் காண், பார்த்தன் தன் பணியைக் கண்ட கானவன் காண், கடல் அவன் காண், மலை ஆனான் காண், களியானை ஈர் உரிவை கதறப் போர்த்த வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
481 | ஏயவன் காண்; எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண்; இன்பன் காண்; துன்பங்கள் இல்லாதான் காண்; தாய் அவன் காண், உலகுக்கு ஓர்; தன் ஒப்பு இல்லாத் தத்துவன் காண்; உத்தமன் காண்; தானே எங்கும் ஆயவன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; அகம் குழைந்து, மெய் அரும்பி, அழுவார் தங்கள் வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
482 | உய்த்தவன் காண்; உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண்; ஓங்காரத்து ஒருவன் காண்; உலகுக்கு எல்லாம் வித்து அவன் காண்; விண் பொழியும் மழை ஆனான் காண்; விளைவு அவன் காண்; விரும்பாதார் நெஞ்சத்து என்றும் பொய்த்தவன் காண்; பொழில் ஏழும் தாங்கினான் காண்; புனலோடு, வளர்மதியும், பாம்பும், சென்னி வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
483 | கூற்று அவன் காண், குணம் அவன் காண், குறி ஆனான் காண், குற்றங்கள் அனைத்தும் காண், கோலம் ஆய நீற்றவன் காண், நிழல் அவன் காண், நெருப்பு ஆனான் காண், நிமிர் புன்சடை முடிமேல் நீர் ஆர் கங்கை ஏற்றவன் காண், ஏழ் உலகும் ஆயினான் காண், இமைப்பு அளவில் காமனை முன் பொடி ஆய் வீழ மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
484 | நிலையவன் காண்; தோற்று அவன் காண்; நிறை ஆனான் காண்; நீர் அவன் காண்; பார் அவன் காண், ஊர் மூன்று எய்த சிலையவன் காண்; செய்ய வாய், கரிய கூந்தல், தேன்மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண்; கலையவன் காண்; காற்று அவன் காண்; காலன் வீழக் கறுத்தவன் காண்; கயிலாயம் என்னும் தெய்வ- மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
485 | பெண் அவன் காண், ஆண் அவன் காண், பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண், அரி அவன் காண், அயன் ஆனான் காண், எண் அவன் காண், எழுத்து அவன் காண், இன்பக் கேள்வி இசை அவன் காண், இயல் அவன் காண், எல்லாம் காணும் கண் அவன் காண், கருத்து அவன் காண், கழிந்தோர் செல்லும் கதி அவன் காண், மதி அவன் காண், கடல் ஏழ் சூழ்ந்த மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
486 | முன்னவன் காண், பின்னவன் காண், மூவா மேனி முதல் அவன் காண், முடிவு அவன் காண், மூன்று சோதி அன்னவன் காண், அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண், சேயவன் காண், அளவு இல் சோதி மின் அவன் காண், உரும் அவன் காண், திருமால் பாகம் வேண்டினன் காண், ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
487 | நெதி அவன் காண், யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண், வேதியன் காண், நினைவார்க்கு என்றும் கதி அவன் காண், கார் அவன் காண், கனல் ஆனான் காண், காலங்கள் ஊழியாக் கலந்து நின்ற பதி அவன் காண், பழம் அவன் காண், இரதம் தான் காண், பாம்போடு திங்கள் பயில வைத்த மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
488 | பங்கயத்தின் மேலானும், பாலன் ஆகி உலகு அளந்த படியானும், பரவிக் காணாது அங்கை வைத்த சென்னியராய், அளக்க மாட்டா அனல் அவன் காண்; அலை கடல் சூழ் இலங்கை வேந்தன் கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண்; அழகன் காண்; கோலம் ஆய மங்கையர்க்கு ஓர் கூறன் காண் வானோர் ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |
|
உரை
|
|
|
|