6.49 திருக்கோகரணம்
திருத்தாண்டகம்
489சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்; தாழ் சடையான்
              காண்; சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண்;
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண்; அவ்
                 உருவில் அவ் உருவம் ஆயினான் காண்;
பந்தரத்து நால் மறைகள் பாடினான் காண்; பலபலவும்
                            பாணி பயில்கின்றான் காண்;
மந்திரத்து மறை பொருளும் ஆயினான் காண் மா கடல்
                         சூழ் கோகரணம் மன்னினானே.
உரை
   
490தந்த வ(அ)த்தன் தன் தலையைத் தாங்கினான் காண்; சாரணன்
           காண்; சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண்;
கெந்தத்தன் காண்; கெடில வீரட்டன் காண்; கேடு இலி காண்;
                      கெடுப்பார் மற்று இல்லாதான் காண்;
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண்; வீரன் காண்; வியன்
                              கயிலை மேவினான் காண்;
வந்து ஒத்த நெடுமாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல்
                          சூழ் கோகரணம் மன்னினானே.
உரை
   
491தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண்; தாழ் சடை
                எம்பெருமான் காண்; தக்கார்க்கு உள்ள
பொன் உருவச் சோதி; புனல் ஆடினான் காண்; புராணன்
                     காண்; பூதங்கள் ஆயினான் காண்;
மின் உருவ நுண் இடையாள் பாகத்தான் காண்; வேழத்தின்
                உரி வெருவப் போர்த்தான் தான் காண்;
மன் உரு ஆய் மாமறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ்
                            கோகரணம் மன்னினானே.
உரை
   
492ஆறு ஏறு செஞ்சடை எம் ஆரூரன் காண்; அன்பன் காண்;
                   அணி பழனம் மேயான் தான் காண்;
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண்; நிருபன் காண்;
                     நிகர் ஒன்றும் இல்லாதான் காண்;
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண்;
       கொக்கரையான் காண்; குழு நல் பூதத்தான் காண்;
மாறு ஆய மதில்மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல்
                      சூழ் கோகரணம் மன்னினானே.
உரை
   
493சென்று அச் சிலை வாங்கிச் சேர்வித்தான் காண்; தியம்பகன்
                           காண்; திரி புரங்கள் மூன்றும்
பொன்றப் பொடி ஆக நோக்கினான் காண்; பூதன் காண்;
                                 பூதப்படையாளீ காண்;
அன்று அப் பொழுதே அருள் செய்தான் காண்; அனல் ஆடி
               காண்; அடியார்க்கு அமுது ஆனான் காண்;
மன்றல்-மணம் கமழும் வார்சடையான் காண் மா கடல் சூழ்
                             கோகரணம் மன்னினானே.
உரை
   
494பிறையோடு பெண் ஒருபால் வைத்தான் தான் காண்; பேரவன்
                 காண்; பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண்;
கறை ஓடு மணிமிடற்றுக் காபாலீ காண்; கட்டங்கன் காண்,
                                கையில் கபாலம் ஏந்திப்
பறையோடு பல்கீதம் பாடினான் காண்; ஆடினான் காண்,
                                    பாணி ஆக நின்று;
மறையோடு மா கீதம் கேட்டான் தான் காண் மா கடல் சூழ்
                              கோகரணம் மன்னினானே.
உரை
   
495மின் அளந்த மேல்முகட்டின் மேல் உற்றான் காண்; விண்ணவர்
                     தம் பெருமான் காண்; மேவில் எங்கும்
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண்; மூ இலை
                    வேல் சூலத்து எம் கோலத்தான் காண்;
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண்; ஏ வலன்
                       காண்; இமையோர்கள் ஏத்த நின்று,
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ்
                               கோகரணம் மன்னினானே.
உரை
   
496பின்னுசடை மேல் பிறை சூடினான் காண்; பேர் அருளன் காண்;
                          பிறப்பு ஒன்று இல்லாதான் காண்;
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண்; மூ எயிலும் செற்று
                            உகந்த முதல்வன் தான் காண்;
இன்ன உரு என்று அறிவு ஒணாதான் தான் காண்; ஏழ் கடலும்
                            ஏழ் உலகும் ஆயினான் காண்;
மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மா கடல் சூழ்
                               கோகரணம் மன்னினானே.
உரை
   
497வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண்; வீரன்
                       காண்; வீரட்டம் மேவினான் காண்;
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண்; பூதன் காண்;
                               பூதப் படையினான் காண்;
கட்டக் கடுவினைகள் காத்து ஆள்வான் காண்; கண்டன்
               காண்; வண்டு உண்ட கொன்றையான் காண்;
வட்ட மதிப்பாகம் சூடினான் காண் மா கடல் சூழ்
                              கோகரணம் மன்னினானே.
உரை
   
498கையால் கயிலை எடுத்தான் தன்னைக் கால் விரலால்-தோள்
                             நெரிய ஊன்றினான் காண்;
மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு
                           அருள்கள் நல்கினான் காண்;
பொய்யர் மனத்துப் புறம்பு ஆவான் காண்; போர்ப்
           படையான் காண்; பொருவார் இல்லாதான் காண்;
மை கொள் மணிமிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ்
                              கோகரணம் மன்னினானே.
உரை