6.50 திருவீழிமிழலை
திருத்தாண்டகம்
499போர் ஆனை ஈர் உரிவைப் போர்வை யானை, புலி அதளே
                          உடை ஆடை போற்றினானை,
பாரானை, மதியானை, பகல் ஆனானை, பல் உயிர் ஆய்
                       நெடுவெளி ஆய்ப் பரந்து நின்ற
நீரானை, காற்றானை, தீ ஆனானை, நினையாதார் புரம் எரிய
                                  நினைந்த தெய்வத்-
தேரானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
                                      சேர்கின்றாரே.
உரை
   
500சவம் தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு தலை ஓடு
                          மயிர்க்கயிறு தரித்தான் தன்னை,
பவம் தாங்கு பாசு பத வேடத்தானை, பண்டு அமரர்
                       கொண்டு உகந்த வேள்வி எல்லாம்
கவர்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, கழல் அடைந்தான்
                             மேல் கறுத்த காலன் வீழச்
சிவந்தானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
                                        சேர்கின்றாரே.
உரை
   
501அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை,
              அகத்தியனை உகப்பானை, அயன் மால் தேட
நின்றானை, கிடந்த கடல் நஞ்சு உண்டானை, நேரிழையைக்
                         கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்
வென்றானை, மீயச்சூர் மேவினானை, மெல்லியலாள்
                       தவத்தின் நிறை அளக்கல் உற்றுச்
சென்றானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
                                        சேர்கின்றாரே.
உரை
   
502தூயானை, சுடர்ப் பவளச்சோதியானை, தோன்றிய எவ்
                        உயிர்க்கும் துணை ஆய் நின்ற
தாயானை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை, சங்கரனை,
                               சந்தோக சாமம் ஓதும்
வாயானை, மந்திரிப்பார் மனத்து உளானை,
        வஞ்சனையால் அஞ்சு எழுத்தும் வழுத்துவார்க்குச்
சேயானை, திரு வீழிமிழலையானை, சேராதார்
                           தீநெறிக்கே சேர்கின்றாரே.
உரை
   
503நல்-தவத்தின் நல்லானை, தீது ஆய் வந்த நஞ்சு அமுது
                           செய்தானை, அமுதம் உண்ட
மற்ற(அ)அமரர் உலந்தாலும் உலவாதானை, வருகாலம்
                                செல்காலம் வந்தகாலம்
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு
                சுடரை, இரு விசும்பின் ஊர்மூன்று ஒன்றச்
செற்றவனை, திரு வீழிமிழலையானை, சேராதார்
                             தீநெறிக்கே சேர்கின்றாரே.
உரை
   
504மை வானம் மிடற்றானை, அவ் வான் மின் போல் வளர்
               சடைமேல் மதியானை, மழை ஆய் எங்கும்
பெய்வானை, பிச்சாடல் ஆடுவானை, பிலவாய
                  பேய்க்கணங்கள் ஆர்க்கச் சூல் அம்பு
ஒய்வானை, பொய் இலா மெய்யன் தன்னை, பூதலமும்
                     மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை
செய்வானை, திரு வீழிமிழலையானை, சேராதார்
                             தீநெறிக்கே சேர்கின்றாரே.
உரை
   
505மிக்கானை, குறைந்து அடைந்தார் மேவலானை, வெவ்வேறு
                        ஆய் இரு மூன்று சமயம் ஆகிப்
புக்கானை, எப்பொருட்கும் பொது ஆனானை, பொன்னுலகத்தவர்
                        போற்றும் பொருளுக்கு எல்லாம்
தக்கானை, தான் அன்றி வேறு ஒன்று இல்லாத் தத்துவனை,
                                தடவரையை நடுவு செய்த
திக்கானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
                                        சேர்கின்றாரே.
உரை
   
506வானவர் கோன் தோள் இறுத்த மைந்தன் தன்னை, வளை
                      குளமும் மறைக்காடும் மன்னினானை,
ஊனவனை, உயிரவனை, ஒரு நாள் பார்த்தன் உயர்
                   தவத்தின் நிலை அறியல் உற்றுச் சென்ற
கானவனை, கயிலாயம் மேவினானை, கங்கை சேர்
                        சடையானை, கலந்தார்க்கு என்றும்
தேனவனை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
                                         சேர்கின்றாரே.
உரை
   
507பரத்தானை; இப் பக்கம் பல ஆனானை; பசுபதியை; பத்தர்க்கு
                                        முத்தி காட்டும்
வரத்தானை; வணங்குவார் மனத்து உளானை; மாருதம், மால்,
                   எரி, மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம்
சரத்தானை; சரத்தையும் தன் தாள்கீழ் வைத்த தபோதனனை;
                        சடாமகுடத்து அணிந்த பைங்கண்
சிரத்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே
                                         சேர்கின்றாரே.
உரை
   
508அறுத்தானை, அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை; அஞ்சாதே
                       வரை எடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; இந்து வினைத்
                             தேய்த்தானை; இரவிதன் பல்
பறித்தானை; பகீரதற்கா வானோர் வேண்டப் பரந்து இழியும்
                         புனல் கங்கை பனி போல் ஆகச்
செறித்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே
                                         சேர்கின்றாரே.
உரை