தொடக்கம் |
|
|
6.52 திருவீழிமிழலை திருத்தாண்டகம் |
520 | கண் அவன் காண்; கண் ஒளி சேர் காட்சியான் காண்; கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற பண் அவன் காண்; பண் அவற்றின் திறம் ஆனான் காண்; பழம் ஆகிச் சுவை ஆகிப் பயக்கின்றான் காண்; மண் அவன் காண்; தீ அவன் காண்; நீர் ஆனான் காண்; வந்து அலைக்கும் மாருதன் காண்; மழை மேகம் சேர் விண் அவன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |
|
உரை
|
|
|
|
|
521 | ஆலைப் படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சு எழுத்தின் நாமத்தான் காண்; சீலம் உடை அடியார் சிந்தையான் காண்; திரி புரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண்; பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண்; பண்டரங்க வேடன் காண்; பலி தேர்வான் காண்; வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |
|
உரை
|
|
|
|
|
522 | தண்மையொடு வெம்மை தான் ஆயினான் காண்; சக்கரம் புள்பாகற்கு அருள்செய்தான் காண்; கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண்; காமன் உடல் வேவித்த கண்ணினான் காண்; எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண்; இருவர்க்கு எரி ஆய் அருளினான் காண்; விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |
|
உரை
|
|
|
|
|
523 | காது இசைந்த சங்கக் குழையினான் காண்; கனகமலை அனைய காட்சியான் காண்; மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண்; வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண்; ஆதியன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; ஐந்தலை மாநாகம் நாண் ஆக்கினான் காண்; வேதியன் காண்; வேதவிதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |
|
உரை
|
|
|
|
|
524 | நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்; நித்தமணவாளன் என நிற்கின்றான் காண்; கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண்; காலன் உயிர் காலால் கழிவித்தான் காண்; செய்ய திருமேனியில் வெண்நீற்றினான் காண்; செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினான் காண்; வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |
|
உரை
|
|
|
|
|
525 | கண் துஞ்சும் கரு நெடுமால் ஆழி வேண்டி, கண் இடந்து, சூட்ட, கண்டு அருளுவான் காண்; வண்டு உண்ணும் மதுக் கொன்றை, வன்னி, மத்தம், வான்கங்கை, சடைக் கரந்த மாதேவன் காண்; பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண்; பரமன் காண்; பரமேட்டி ஆயினான் காண்; வெண்திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலை யானே. |
|
உரை
|
|
|
|
|
526 | கல்பொலி தோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக்கு அருள்செய்த கருணையான் காண்; வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண்; வேடுவனாய்ப் போர் பொருது காட்டினான் காண்; தற்பரம் ஆய் நற்பரம் ஆய் நிற்கின்றான் காண்; சதாசிவன் காண்; தன் ஒப்பார் இல்லாதான் காண்; வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |
|
உரை
|
|
|
|
|
527 | மெய்த்தவன் காண், மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம்; விருப்பு இலா இருப்புமன வினையர்க்கு என்றும் பொய்த்தவன் காண்; புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண்; உய்த்தவன் காண், உயர் கதிக்கே உள்கினாரை; உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்யச் செய்யும் வித்தகன் காண் வித்தகர் தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே. |
|
உரை
|
|
|
|
|
528 | சந்திரனைத் திருவடியால்-தளர்வித்தான் காண்; தக்கனையும முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்; இந்திரனைத் தோள் முறிவித்து அருள் செய்தான் காண்; ஈசன் காண்; நேசன் காண், நினைவோர்க்கு எல்லாம், மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண்; மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம் வெந்தழலின் விரி சுடர் ஆய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |
|
உரை
|
|
|
|
|
529 | ஈங்கைப் பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண்; எம்மான்காண்; கைம்மாவின் உரி போர்த்தான் காண்; ஓங்கு மலைக்கு அரையன் தன் பாவையோடும் ஓர் உரு ஆய் நின்றான் காண்; ஓங்காரன் காண்; கோங்கு மலர்க்கொன்றை அம்தார்க் கண்ணியான் காண்; கொல் ஏறு வெல் கொடிமேல் கூட்டினான் காண்; வேங்கை வரிப் புலித்தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |
|
உரை
|
|
|
|