தொடக்கம் |
|
|
6.53 திருவீழிமிழலை திருத்தாண்டகம் |
530 | மான் ஏறு கரம் உடைய வரதர் போலும்; மால்வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும்; கான் ஏறு கரி கதற உரித்தார் போலும்; கட்டங்கம், கொடி, துடி, கைக் கொண்டார் போலும்; தேன் ஏறு திரு இதழித்தாரார் போலும்; திருவீழிமிழலை அமர் செல்வர் போலும்; ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
531 | சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்; நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும்; நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும்; குமரனையும் மகன் ஆக உடையார் போலும்; குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும்; அமரர்கள் பின் அமுது உண, நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
532 | நீறு அணிந்த திருமேனி நிமலர் போலும்; நேமி, நெடுமாற்கு, அருளிச் செய்தார் போலும்; ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும்; எயில் மூன்றும் எரிசரத்தால் எய்தார் போலும்; வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும்; வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும்; ஆறு அணிந்த சடா மகுடத்து அழகர் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
533 | கை வேழ முகத்தவனைப் படைத்தார் போலும்; கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்; செய் வேள்வித் தக்கனை முன் சிதைத்தார் போலும்; திசை முகன் தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும்; மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும்; வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும்; ஐவேள்வி, ஆறு அங்கம், ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
534 | துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும்; சுடர் மூன்றும் சோதியும் ஆய்த் யார் போலும்; பொன் ஒத்த திருமேனிப் புனிதர் போலும்; பூதகணம் புடை சூழ வருவார் போலும்; மின் ஒத்த செஞ்சடை வெண்பிறையார் போலும்; வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும்; அன்னத்தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
535 | மாலாலும் அறிவு அரிய வரதர் போலும்; மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும்; நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும்; நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்; வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
536 | பஞ்சு அடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்; பைந்நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும்; மஞ்சு அடுத்த மணி நீல கண்டர் போலும்; வட கயிலை மலை உடைய மணாளர் போலும்; செஞ்சடைக்கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும்; திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும்; அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
537 | குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும்; குடமூக்கில் இடம் ஆக்கிக் கொண்டார் போலும்; புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும்; புள் அரசைக் கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும்; வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும்; வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும்; அண்டத்து உப் புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
538 | முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும்; மொய் பவளக்கொடி அனைய சடையார் போலும்; எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும்; இரு-நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்; மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
539 | கரி உரி செய்து உமை வெருவக் கண்டார் போலும்; கங்கையையும் செஞ்சடை மேல் கரந்தார் போலும்; எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும்; ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும்; விரி கதிரோர் இருவரை முன் வெகுண்டார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும்; அரி பிரமர் துதி செய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
540 | கயிலாயமலை எடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும்; குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்து ஆட வல்ல குழகர் போலும்; வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; அயில் ஆய மூ இலைவேல் படையார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |
|
உரை
|
|
|
|