6.54 திருப்புள்ளிருக்குவேளூர்
திருத்தாண்டகம்
541ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு முடி
                         அயன் மால் அறியா வண்ணம்
நீண்டானை; நெடுங்கள மா நகரான் தன்னை; நேமி வான்
                       படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானை; கேதாரம் மேவினானை; கேடு இலியை; கிளர்
                           பொறிவாள் அரவோடு என்பு
பூண்டானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற 
                                 நாள் போக்கினேனே!.
உரை
   
542சீர்த்தானை, சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை,
                         சிவன் தன்னை, தேவ தேவை,
கூர்த்தானை, கொடு நெடுவேல் கூற்றம் தன்னைக் குரை
               கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானை, பிறப்பு இலியை, இறப்பு ஒன்று இல்லாப்
              பெம்மானை, கைம்மாவின் உரிவை பேணிப்
போர்த்தானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற
                                 நாள் போக்கினேனே!.
உரை
   
543பத்திமையால் பணிந்து, அடியேன் தன்னைப் பல்-நாள்
                   பாமாலை பாடப் பயில்வித்தானை;
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை; எம்மானை; என்
                            உள்ளத்துள்ளே ஊறும்
அத் தேனை; அமுதத்தை; ஆவின் பாலை; அண்ணிக்கும்
                     தீம் கரும்பை; அரனை; ஆதிப்-
புத்தேளை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே 
                        ஆற்ற நாள் போக்கினேனே!.
உரை
   
544இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவம் கெடுத்து,
                                   ஏழையேனை உய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டி, தன் போல் சிவலோக
                              நெறி அறியச் சிந்தை தந்த
அருளானை; ஆதி மா தவத்து உளானை; ஆறு அங்கம் நால்
                               வேதத்து அப்பால் நின்ற
பொருளானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே ஆற்ற
                                 நாள் போக்கினேனே!.
உரை
   
545மின் உருவை; விண்ணகத்தில் ஒன்று ஆய், மிக்கு வீசும்
         கால் தன் அகத்தில் இரண்டு ஆய், செந்தீத்-
தன் உருவில் மூன்று ஆய், தாழ் புனலில் நான்கு ஆய்,
           தரணிதலத்து அஞ்சு ஆகி, எஞ்சாத் தஞ்ச
மன் உருவை; வான் பவளக்கொழுந்தை; முத்தை; வளர்
           ஒளியை; வயிரத்தை; மாசு ஒன்று இல்லாப்
பொன் உருவை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே
                      ஆற்ற நாள் போக்கினேனே!.
உரை
   
546அறை ஆர் பொன்கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை
       அம்பலத்துள் நடம் ஆடும் அழகன் தன்னை,
கறை ஆர் மூ இலை நெடுவேல் கடவுள் தன்னை,
            கடல் நாகைக்காரோணம் கருதினானை,
இறையானை, என் உள்ளத்துள்ளே விள்ளாது
          இருந்தானை, ஏழ்பொழிலும் தாங்கி நின்ற
பொறையானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே
                     ஆற்ற நாள் போக்கினேனே!.
உரை
   
547நெருப்பு அனைய திருமேனி வெண்நீற்றானை, நீங்காது என்
                              உள்ளத்தினுள்ளே நின்ற
விருப்பவனை, வேதியனை, வேதவித்தை, வெண்காடும்
                          வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை, இடை மருதோடு ஈங்கோய் நீங்கா
           இறையவனை, எனை ஆளும் கயிலை என்னும்
பொருப்பவனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே
                          ஆற்ற நாள் போக்கினேனே!.
உரை
   
548பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை, பிரிவு
                           இலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை, மந்திரமும் தந்திரமும்
                                    மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை, திரிபுரங்கள்
                    தீ எழத் திண் சிலை கைக் கொண்ட
போரானை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற
                                நாள் போக்கினேனே!.
உரை
   
549பண்ணியனை, பைங்கொடியாள் பாகன் தன்னை, படர்
          சடைமேல் புனல் கரந்த படிறன் தன்னை,
நண்ணியனை, என் ஆக்கித் தன் ஆனானை, நால்
      மறையின் நல் பொருளை, நளிர் வெண்திங்கள்
கண்ணியனை, கடிய நடை விடை ஒன்று ஏறும்
          காரணனை, நாரணனை, கமலத்து ஓங்கும்
புண்ணியனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே
                    ஆற்ற நாள் போக்கினேனே!.
உரை
   
550இறுத்தானை, இலங்கையர் கோன் சிரங்கள் பத்தும்; எழு
        நரம்பின் இன் இசை கேட்டு இன்பு உற்றானை;
அறுத்தானை, அடியார் தம் அருநோய் பாவம்; அலை
                 கடலில் ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை; கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை;
                  கனல், மழுவும், கலையும், அங்கை
பொறுத்தானை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே
                       ஆற்ற நாள் போக்கினேனே!.
உரை