தொடக்கம் |
|
|
6.77 திருவாய்மூர் திருத்தாண்டகம் |
765 | பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர் கணம் கண்டேன்; மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை அனல் கண்டேன்; கங்கையாளைக் கோடல், அரவு, ஆர் சடையில் கண்டேன்; கொக்கின் இதழ் கண்டேன்; கொன்றை கண்டேன்; வாடல்-தலை ஒன்று கையில் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
766 | பாலின் மொழியாள் ஓர் பாகம் கண்டேன்; பதினெண்கணமும் பயிலக் கண்டேன்; நீல நிறமுண்ட கண்டம் கண்டேன்; நெற்றி-நுதல் கண்டேன்; பெற்றம் கண்டேன்; காலைக் கதிர் செய் மதியம் கண்டேன்; கரந்தை திருமுடிமேல்-தோன்றக் கண்டேன்; மாலைச் சடையும் முடியும் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
767 | மண்ணைத் திகழ நடம் அது ஆடும், வரை சிலம்பு ஆர்க்கின்ற, பாதம் கண்டேன்; விண்ணில்-திகழும் முடியும் கண்டேன்; வேடம் பல ஆம் சரிதை கண்டேன்; நண்ணிப் பிரியா மழுவும் கண்டேன்; நாலுமறை அங்கம் ஓதக் கண்டேன்; வண்ணம் பொலிந்து-இலங்கு கோலம் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
768 | விளைத்த பெரும் பத்தி கூர, நின்று மெய் அடியார் தம்மை விரும்பக் கண்டேன்; இளைக்கும் கதம் நாகம் மேனி கண்டேன்; என் பின்கலம் திகழ்ந்து தோன்றக் கண்டேன்; திளைக்கும் திருமார்பில் நீறு கண்டேன்; சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற, அன்று, வளைத்த வரிசிலையும் கையில் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
769 | கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்; காலில் கழல் கண்டேன்; கரியின் தோல் கொண்டு ஊன் மறையப் போர்த்த வடிவும் கண்டேன்; உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்; நால் மறையானோடு நெடிய மாலும் நண்ணி வரக் கண்டேன்; திண்ணம் ஆக மான்மறி தம் கையில் மருவக் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
770 | அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக் கண்டேன்; அவ் அவர்க்கே ஈந்த கருணை கண்டேன்; முடி ஆர் சடைமேல் அரவம் மூழ்க மூரிப் பிறை போய் மறையக் கண்டேன்; கொடி, ஆர், அதன்மேல் இடபம் கண்டேன்; கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்; வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
771 | குழை ஆர் திருத்தோடு காதில் கண்டேன்; கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்; இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன்; ஏழ் இசை யாழ், வீணை, முரலக் கண்டேன்; தழை ஆர் சடை கண்டேன்; தன்மை கண்டேன்; தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்; மழை ஆர் திருமிடறும் மற்றும் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
772 | பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்; போற்று இசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்; பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன்; பார் ஆகிப் புனல் ஆகி நிற்கை கண்டேன்; விருந்து ஆய்ப் பரந்த தொகுதி கண்டேன்; மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்; மருந்து ஆய்ப் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
773 | மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன்; வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்; கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன்; கங்கணமும், அங்கைக் கனலும், கண்டேன்; ஐயம் பல ஊர் திரியக் கண்டேன்; அன்றவன் தன் வேள்வி அழித்து உகந்து, வையம் பரவ இருத்தல் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |
|
உரை
|
|
|
|
|
774 | கலங்க இருவர்க்கு அழல் ஆய் நீண்ட காரணமும் கண்டேன்; கரு ஆய் நின்று, பலங்கள் தரித்து, உகந்த பண்பும் கண்டேன்; பாடல் ஒலி எலாம் கூடக் கண்டேன்; இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து, அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்; வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |
|
உரை
|
|
|
|