6.92 திருக்கழுக்குன்றம்
திருத்தாண்டகம்
908மூ இலை வேல் கையானை, மூர்த்தி தன்னை, முது பிணக்காடு
                          உடையானை, முதல் ஆனானை,
ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோனை, ஆலாலம்
                           உண்டு உகந்த ஐயன் தன்னை,
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வு அரிய
                           பெருமானை, புனிதன் தன்னை,
காவலனை, கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை, கற்பகத்தை,
                          கண் ஆரக் கண்டேன், நானே.
உரை
   
909பல் ஆடுதலை சடை மேல் உடையான் தன்னை, பாய்
              புலித்தோல் உடையானை, பகவன் தன்னை,
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை,
             சுடர் உருவில் என்பு அறாக் கோலத்தானை,
அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை,
            ஆலின் கீழ் இருந்தானை, அமுது ஆனானை,
கல் ஆடை புனைந்து அருளும் காபாலி(ய்)யை,
              கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.
உரை