Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.87 திருப்பனையூர்
சீகாமரம்
1மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில்
பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர்,
தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே.
உரை
   
3செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு
பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப் பனையூர்,
திங்கள் சூடிய செல்வனார், அடியார் தம்மேல் வினை தீர்ப்பராய் விடில்
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே.
உரை
   
5கொங்கையார் பலரும் குடைந்து ஆட, நீர்க் குவளை மலர்தர,
பங்கயம் மலரும் பழனத் திருப் பனையூர்,
மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர்; மான் மழுவினொடு
அங்கைத் தீ உகப்பார்; அவரே அழகியரே.
உரை
   
7மரங்கள் மேல் மயில் ஆல, மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல்
திரங்கல் வன் முகவன் புகப் பாய் திருப் பனையூர்,
துரங்க வாய் பிளந்தானும், தூ மலர்த் தோன்றலும், அறியாமல்-தோன்றி நின்று,
அரங்கில் ஆட வல்லார் அவரே அழகியரே.
உரை
   
9குரக்கு இனம் குதி கொள்ள, தேன் உக, குண்டு தண் வயல் கெண்டை பாய்தர,
பரக்கும் தண்கழனிப் பழனத் திருப் பனையூர்,
இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை தோள் இருபது தாள் நெரித
அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே.
உரை
   
10வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா தவர் வளரும், வளர் பொழில்,
பஞ்சின் மெல் அடியார் பயிலும்-திருப் பனையூர்,
வஞ்சியும் வளர் நாவலூரன்வனப்பகை அவள் அப்பன், வன்தொண்டன்
செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே.
உரை