தொடக்கம் |
|
|
7.11 திருப்பூவணம் இந்தளம் |
1 | திரு உடையார், திருமால் அயனாலும் உரு உடையார், உமையாளை ஒர்பாகம் பரிவு உடையார், அடைவார் வினை தீர்க்கும் புரிவு உடையார், உறை பூவணம் ஈதோ! . |
|
உரை
|
|
|
|
|
2 | எண்ணி இருந்தும், கிடந்தும், நடந்தும், அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்; பண் இசை ஆர் மொழியார் பலர் பாடப் புண்ணியனார்; உறை பூவணம் ஈதோ! . |
|
உரை
|
|
|
|
|
3 | தெள்ளிய பேய்பல தம் அவற்றொடு நள் இருள் நட்டம் அது ஆடல் நவின்றோர், புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும் புள்ளுவனார், உறை பூவணம் ஈதோ! . |
|
உரை
|
|
|
|
|
4 | நிலன் உடை மான்மறி கையது; தெய்வக் கனல் உடை மா மழு ஏந்தி, ஓர் கையில் அனல் உடையார்; அழகு ஆர்தரு சென்னிப் புனல் உடையார்; உறை பூவணம் ஈதோ! . |
|
உரை
|
|
|
|
|
5 | நடை உடை நல் எருது ஏறுவர்; நல்லார் கடை கடைதோறு, “இடுமின், பலி!” என்பார்; துடி இடை நல் மடவாளொடு மார்பில் பொடி அணிவார்; உறை பூவணம் ஈதோ! . |
|
உரை
|
|
|
|
|
6 | மின் அனையாள் திருமேனி விளங்க ஒர் தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன், முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய பொன் அனையான், உறை பூவணம் ஈதோ! . |
|
உரை
|
|
|
|
|
7 | மிக்கு இறை ஏயவன் துன் மதியாய் விட, நக்கு இறையே விரலால் இற ஊன்றி; நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம் புக்கு உறைவான்; உறை பூவணம் ஈதோ! . |
|
உரை
|
|
|
|
|
8 | சீரின் மிகப் பொலியும் திருப்பூவணம் ஆர இருப்பு இடமா உறைவான் தனை ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே . |
|
உரை
|
|
|
|