தொடக்கம் |
|
|
7.22 திருப்பழமண்ணிப்படிக்கரை நட்டராகம் |
1 | முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான், சென்னியில் எங்கள் பிரான், திரு நீல மிடற்று எம்பிரான், மன்னிய எங்கள் பிரான், மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்ப் பன்னிய எங்கள் பிரான்-பழமண்ணிப் படிக் கரையே . |
|
உரை
|
|
|
|
|
2 | அண்ட கபாலம் சென்னி(ய்) அடிமேல் அலர் இட்டு நல்ல தொண்டு அங்கு அடி பரவி, தொழுது ஏத்தி, நின்று ஆடும் இடம்; வெண் திங்கள் வெண்மழுவன், விரை ஆர் கதிர் மூவிலைய பண்டங்கன், மேய இடம் பழமண்ணிப் படிக் கரையே . |
|
உரை
|
|
|
|
|
3 | ஆடுமின், அன்பு உடையீர்! அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு சூடுமின், தொண்டர் உள்ளீர்! உமரோடு எமர் சூழ வந்து, வாடும் இவ் வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச் சென்று, பாடுமின், பத்தர் உள்ளீர், பழமண்ணிப் படிக் கரையே . |
|
உரை
|
|
|
|
|
4 | அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூ எயிலும் கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல் நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்- படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே . |
|
உரை
|
|
|
|
|
5 | உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மங்கை ஒர் கூறு உடையான், வானோர் முதல் ஆய பிரான், அம் கையில் வெண் மழுவன்(ன்), அலை ஆர் கதிர் மூவிலைய பங்கய பாதன், இடம் பழமண்ணிப் படிக் கரையே . |
|
உரை
|
|
|
|
|
6 | செடி படத் தீ விளைத்தான், சிலை ஆர் மதில்; செம் புனம் சேர் கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏறக் கொண்டான்; கடியவன் காலன் தன்னைக் கறுத்தான்; கழல் செம்பவளப்- படியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே . |
|
உரை
|
|
|
|
|
7 | கடுத்தவன்-தேர் கொண்டு ஓடிக் கயிலாய நல் மாமலையை எடுத்தவன், ஈர்-ஐந்துவாய் அரக்கன்-முடிபத்து அலற, விடுத்து, அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடல் உறப் படுத்தவன்; பால் வெண் நீற்றன்-பழமண்ணிப் படிக் கரையே . |
|
உரை
|
|
|
|
|
8 | திரிவன மும்மதிலும்(ம்) எரித்தான்; இமையோர் பெருமான்; அரியவன்; அட்ட புட்பம்(ம்) அவை கொண்டு அடி போற்றி, நல்ல கரியவன் நான்முகனும்(ம்), அடியும் முடி காண்பு அரிய பரியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே . |
|
உரை
|
|
|
|
|
9 | வெற்று அரைக் கற்ற(அ)மணும், விரையாது வெண் தாலம் உண்ணும் துற்றரை, துற்று அறுப்பான் துன்ன ஆடைத் தொழில் உடையீர்! பெற்றரைப் பித்தர் என்று(க்) கருதேன்மின்! படிக்கரையுள் பற்றரைப் பற்றி நின்று(ப்) பழி பாவங்கள் தீர்மின்களே! . |
|
உரை
|
|
|
|
|
10 | பல் உயிர் வாழும் தெண் நீர்ப் பழமண்ணிப் படிக் கரையை அல்லி அம் தாமரைத்தார் ஆரூரன் உரைத்த தமிழ் சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும், தமர்க்கும், கிளைக்கும், எல்லியும் நன்பகலும்(ம்) இடர் கூருதல் இல்லை அன்றே! . |
|
உரை
|
|
|
|