தொடக்கம் |
|
|
7.24 திருமழபாடி நட்டராகம் |
1 | பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து, மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே! மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . |
|
உரை
|
|
|
|
|
2 | கீள் ஆர் கோவணமும், திருநீறு மெய் பூசி, உன்தன் தாளே வந்து அடைந்தேன்; தலைவா! எனை ஏன்றுகொள், நீ! வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே! கேளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . |
|
உரை
|
|
|
|
|
3 | எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்; இம் மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்; மைம் மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . |
|
உரை
|
|
|
|
|
4 | பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு எல்லாம் தொண்டே பூண்டொழிந்தேன்; தொடராமைத் துரிசு அறுத்தேன்; வண்டு ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அண்டா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . |
|
உரை
|
|
|
|
|
5 | கண் ஆய், ஏழ் உலகும் கருத்து ஆய அருத்தமும் ஆய், பண் ஆர் இன் தமிழ் ஆய், பரம் ஆய பரஞ்சுடரே! மண் ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! அண்ணா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . |
|
உரை
|
|
|
|
|
6 | நாளார் வந்து அணுகி நலியாமுனம், நின் தனக்கே ஆளா வந்து அடைந்தேன்; அடியேனையும் ஏன்றுகொள், நீ! மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே! ஆளா!நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . |
|
உரை
|
|
|
|
|
7 | சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி! நல்ல வெந்தார் வெண்பொடியாய்! விடை ஏறிய வித்தகனே! மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! எந்தாய்!நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . |
|
உரை
|
|
|
|
|
8 | வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் செய்ய மலர்கள் இட, மிகு செம்மையுள் நின்றவனே! மை ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே! ஐயா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . |
|
உரை
|
|
|
|
|
9 | நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி செய்யும் குறியே! நீர்மையனே! கொடி ஏர் இடையாள் தலைவா! மறி சேர் அம் கையனே! மழபாடியுள் மாணிக்கமே! அறிவே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? . |
|
உரை
|
|
|
|
|
10 | ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை, வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை, சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ் பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே . |
|
உரை
|
|
|
|